பாட்னா: பீகாரில் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை, விபத்துகளில் ஒரு குழந்தை உட்பட 41 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 38 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஞாயிறு, திங்கட்கிழமைகளில் பீகாரின் பல்வேறு பகுதிகளில் சில குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது. தலைநகர் பாட்னாவில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் விபத்தில் இறந்தனர்.
பாண்டேபட்டி கிராமத்தில் ஆபாசப்பாடல்களை ஒலிபரப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்தார். நளந்தாவில் இருதரப்பினருக்கிடையே வெடித்த மோதலின்போது குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

