வேளாண் சட்டங்கள்: அறிக்கை தாக்கல்

வேளாண் சட்டங்கள்: அறிக்கை தாக்கல்

1 mins read
e0a4a9e3-e283-4b34-95fb-3daa5a3a3a47
-

புது­டெல்லி: புதிய மூன்று வேளாண் சட்­டங்­கள் தொடர்­பில் உச்ச நீதி­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட மூவர் குழு தனது அறிக்­கையைத் தாக்­கல் செய்­துள்­ளது.

"கடந்த மாதம் 19ஆம் தேதி எங்­க­ளது அறிக்­கையை மூடிய உறை­யில் வைத்து, உச்ச நீதி­மன்­றத்­தி­டம் சமர்ப்­பித்­து­விட்­டோம்," என்று குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான வேளாண் பொரு­ளி­ய­லா­ளர் அனில் கண்­வத் தெரி­வித்­தார்.

புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து பல மாநில விவ­சா­யிகள் நான்கு மாதங்­க­ளா­கப் போராடி வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து, உச்ச நீதி­மன்­றம் அம்­மூன்று சட்­டங்­க­ளை­யும் மதிப்­பிட திரு கண்­வத், திரு அசோக் குலாட்டி, திரு பிர­மோத் ஜோஷி ஆகி­யோ­ரைக் கொண்ட குழுவை நிய­மித்­தது. அக்­குழு மொத்­தம் 85 வேளாண் சங்­கங்­க­ளி­ட­மும் இதர பங்­கா­ளி­களி­டத்­தி­லும் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்­தது. அறிக்கை விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­டாத நிலை­யில், வரும் 5ஆம் தேதி நீதி­மன்­றம் அதனை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள இருக்­கிறது.