மம்தா: குற்றமில்லை, உரிமை!

மம்தா: குற்றமில்லை, உரிமை!

1 mins read
3479b58e-7c49-491f-9734-5a72b096060a
-

கோல்­கத்தா: நந்­தி­கி­ராம் சட்­ட­மன்றத் தொகு­தி­யில் தான் வெற்றி ­பெற உத­வும்­படி பிர­லாய் பால் எனும் பாஜக தலை­வ­ரி­டம் பேசி­யது உண்­மை­தான் என்று மேற்கு வங்க மாநில முதல்­வர் மம்தா பானர்ஜி ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

இரு நாள்­க­ளுக்­கு­முன் அது தொடர்­பான ஒலிப்­ப­திவு வெளி­யாகி, சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்­நி­லை­யில், "ஆமாம், நான் அவரிடம் பேசி­யது உண்­மை­தான். யாரோ ஒரு­வர் என்­னி­டம் பேச விரும்­பு­வ­தாக என்­னி­டம் கூறப்­பட்­டது. ஆகை­யால், அவ­ரது எண்­ணைப் பெற்று பேசி­னேன். உடல்­நி­லை­யைக் கவ­னித்­துக்­கொள்­ளும்­படி அவ­ரி­டம் கூறி­னேன். இதில் என்ன குற்­றம் இருக்­கிறது?

"ஒரு தொகு­தி­யின் வேட்­பா­ள­ராக, என்னை வெற்­றி­பெ­றச் செய்ய உத­வும்­படி அங்­குள்ள எந்த ஒரு வாக்­கா­ள­ரை­யும் நான் கேட்க முடி­யும். அதற்கு எனக்கு உரிமை இருக்­கிறது," என்று முதல்வர் மம்தா விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

மேற்கு வங்­கத்­தில் எட்­டுக் கட்­டங்­க­ளாக வாக்­குப்­ப­திவு இடம்­பெ­றும் நிலை­யில், இரண்­டாம் கட்­ட­மாக நந்­தி­கி­ராம் உள்­ளிட்ட 30 தொகு­தி­க­ளுக்கு இன்று தேர்­தல் நடை­பெ­று­கிறது.