வாந்தி எடுப்பதற்காக பேருந்திற்கு வெளியே நீட்டினாள்; தமன்னாவின் தலை துண்டானது

வாந்தி எடுப்பதற்காக பேருந்திற்கு வெளியே நீட்டினாள்; தமன்னாவின் தலை துண்டானது

1 mins read
df9361a8-8e29-48b5-8c9b-5b6ca26e4635
-

இந்­தூர்: பேருந்­தில் சென்­றபோது வாந்தி எடுப்­ப­தற்­காக தலையை வெளியே நீட்­டிய சிறு­மி­யின் மீது எதிரே வந்த சரக்கு வாக­னம் மோதி­ய­தில் அச்­சி­று­மி­யின் தலை துண்­டா­னது. இச்­சம்­ப­வம் மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தின் கந்த்வா மாவட்­டத்­தில் நேற்று நிகழ்ந்­தது.

தமன்னா என்ற அந்த 13 வய­துச் சிறுமி தம் தாயா­ரு­ட­னும் சகோ­த­ரி­யு­ட­னும் கந்த்­வா­வில் இருந்து இந்­தூ­ருக்கு பேருந்­தில் சென்­று­கொண்­டி­ருந்­தாள். ஓட்­டு­நருக்­குப் பின்னே இருந்த இருக்­கை­யில் அவர்­கள் அமர்ந்­தி­ருந்­த­னர். பய­ணத்­தின்­போது வாந்தி வரு­வ­து­போல் இருந்­த­தால் திடீ­ரென பேருந்­துச் சன்­ன­லுக்கு வெளியே தமன்னா தலையை நீட்­டி­னாள். அவ்­வே­ளை­யில், எதிர்த்­தி­சை­யில் விரைந்து வந்த சரக்கு வாக­னம் அவள் மீது மோதி­ய­தில் அவ­ளது தலை துண்­டா­னது.

"என்ன நடந்­த­தென்றே புரி­ய­வில்லை. திடீ­ரென, எங்­கள் அனை­வர் மீதும் பேருந்­தி­லும் ரத்­தம் தெறித்­தது. சில நொடி­க­ளுக்­குப் பின், அச்­சி­று­மி­யின் தாயார் அதிர்ச்சி­யில் அல­றி­னார். மிக­வும் பயங்­க­ர­மாக இருந்­தது," என்று அப்­பே­ருந்­துப் பய­ணி­களில் ஒரு­வர் விவ­ரித்­தார்.

உற­வி­ன­ரின் திரு­ம­ணத்­திற்­குச் சென்­ற­போது தமன்னா இப்­படி விபத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக போலிஸ் கூறி­யது. தமன்­னாவை அதி­கா­ரி­யாக்க அவ­ளின் தந்தை விரும்­பி­ய­தா­க­வும் அதற்­காக அவளை அங்­குள்ள நல்­ல­தொரு பள்­ளிக்கு அனுப்­பிப் படிக்க வைத்­த­தா­க­வும் உற­வி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.