செய்தித்துளிகள்

செய்தித்துளிகள்

1 mins read
97cdcd49-b52a-4a0a-a3ec-384330c7a5a5
-

இரவில் 'சார்ஜ்' செய்ய முடியாது

புதுடெல்லி: தீப்பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கையாக, ரயில் பயணிகள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலிலுள்ள மின்னூட்டி முனைகள் மூலம் கைபேசி, மடிக்கணினி போன்றவற்றுக்கு மின்னூட்டம் ஏற்றத் தடை விதிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ; 60 பேர் வெளியேற்றம்

புதுடெல்லி: தலைநகர் புது டெல்லியிலுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்றுக் காலை தீ மூண்டது. இதை அடுத்து, அப்பிரிவிலிருந்த ஏறத்தாழ 60 நோயாளிகள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப் பட்டனர். இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் சில மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் நேற்றுக் காலை ஆடைத் தொழிலகம், பிளாஸ்டிக் ஆலை என மேலும் இரு இடங்களிலும் தீ விபத்து நிகழ்ந்தது.

படகில் வந்த 300 கிலோ ஹெராயின்

கொச்சி: இலங்கையிலிருந்து கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த மீன்பிடிப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே-47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள் ஆகியவற்றை இந்தியக் கடலோரக் காவல் படை கைப்பற்றியதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.