திருவனந்தபுரம்: கேரளாவில் போலி வாக்காளர்கள் அதிகளவில் இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கேரள உயர் நீதிமன்றம், போலி வாக்காளர்களை உடனடியாக களையுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஆய்வு மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 38,000 போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், கேரளாவில் 4.34 லட்சம் பேர் அடங்கிய போலி வாக்காளர் பட்டியலை எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வியாழக்கிழமை வெளியிட்டார்.
காங்கிரஸ் உருவாக்கியுள்ள 'ஆப்பரேஷன் ட்வின்ஸ்' என்ற இணையப் பக்கத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரே மாதிரியான புகைப்படத்துடன் வெவ்வேறு பெயர்களைக் கொண்ட வாக்காளர்கள் இப்பட்டியலில் காணப்படுகின்றனர்.
இதைப்போல மேலும் பல போலி வாக்காளர் பட்டியல்கள் விரைவில் வெளியாகும் என ரமேஷ் கூறியுள்ளார்.