பதிலடி கொடுப்போம்: அமித் ஷா சூளுரை உயிரிழந்த 22 பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அஞ்சலி

2 mins read
f9154942-a675-4ddc-bb1f-2b75cf07a645
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அமைச்சர் அமித் ஷா நேற்று அஞ்சலி செலுத்தினார். படம்: ஊடகம் -

புது­டெல்லி: மாவோ­யிஸ்­டு­கள் நடத்­திய தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்த பாது­காப்­புப் படை வீரர்­க­ளின் தியா­கத்­துக்கு தலை­வ­ணங்­கு­வ­தாக மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

மாவோ­யிஸ்­டு­க­ளுக்கு சரி­யான நேரத்­தில் தக்க பதி­லடி கொடுக்­கப்­படும் என்­றும் அவர் சூளு­ரைத்­துள்­ளார்.

நேற்று மோதல் நிகழ்ந்த பகு­தியை நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு மேற்­கொண்ட அமித் ஷா, மாவோ­யிஸ்­டு­க­ளின் ஆதிக்­கத்தை குறைக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளைக் கேட்­டுக் கொண்­டார்.

நேற்று முன்­தி­னம் சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் உள்ள பிஜா­பூர்-சுக்மா எல்­லைப் பகு­தி­யில் மாவோ­யிஸ்­டு­கள் அதி­க­ள­வில் முகா­மிட்­டி­ருப்­பது குறித்து கிடைத்த தக­வ­லின் பேரில் பாது­காப்­புப் படை­யி­னர் அங்கு அதி­ரடி தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­ட­னர்.

1,500க்கும் மேற்­பட்ட வீரர்­கள் இந்­ந­ட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த நிலை­யில், மாவோ­யிஸ்­டு­கள் திடீர் தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­னர்.

இரு­த­ரப்­புக்­கும் இடையே நடை­பெற்ற கடும் துப்­பாக்­கிச் சண்­டை­யின் முடிவில் பாது­காப்­புப் படை­யைச் சேர்ந்த 22 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில் மாவோ­யிஸ்­டு­கள் தரப்­பி­லும் 20 பேருக்கு மேல் உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் எனத் தெரிய வந்­துள்­ளது.

தாக்­கு­தல் நடத்த பகு­தி­யில் இருந்து பெண் மாவோ­யிஸ்ட் ஒரு­வ­ரது சட­லம் மீட்­கப்­பட்­டுள்­ளது. மற்ற சட­லங்­களை மாவோ­யிஸ்­டு­கள் சில வாக­னங்­களில் கொண்டு செல்­வது ஆளில்லா விமா­னம் மூலம் எடுக்­கப்­பட்ட படங்­க­ளின் வழி தெரிய வந்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி ஒன்­றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாவோ­யிஸ்­டு­கள் தாக்­கு­த­லில் 13 பாது­காப்புப் படை வீரர்­கள் காயம் அடைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். நேற்று அவர்­களை நேரில் சந்­தித்து ஆறு­தல் கூறிய மத்­திய அமைச்­சர் அமித் ஷா, நடந்த சம்­ப­வம் குறித்து அவர்­க­ளி­டம் விரி­வாக கேட்­ட­றிந்­தார்.

பின்­னர் மோதல் நிகழ்ந்த பகு­திக்­குச் சென்று உயிர்த்­ தி­யா­கம் செய்த வீரர்­க­ளுக்கு அவர் அஞ்­சலி செலுத்­தி­னார்.

இதை­ய­டுத்து அதி­கா­ரி­க­ளு­டன் பாது­காப்பு ஏற்­பா­டு­களை பலப்­படுத்­து­வது குறித்து ஆலோ­சனை மேற்­கொண்ட அவர், மாவோ­யிஸ்­டு­க­ளுக்கு உரிய பதி­லடி கொடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

"உயி­ரி­ழந்­து­விட்ட வீரர்­க­ளின் வீரத்தை தேசம் ஒரு­போ­தும் மறக்­காது. அமைதி, முன்­னேற்­றத்­துக்கு எதி­ரான நமது போராட்­டம் தொட­ரும். இது­போன்ற தாக்­கு­தலை சகித்­துக்­கொள்ள இய­லாது," என அமித் ஷா குறிப்­பிட்­டுள்­ளார்.