மம்தா: ஒற்றை காலுடன் வெற்றி பெறுவேன்; அடுத்த இலக்கு டெல்லி

மம்தா: ஒற்றை காலுடன் வெற்றி பெறுவேன்; அடுத்த இலக்கு டெல்லி

2 mins read
4f12c563-5516-4c2c-a916-0f1504d98c02
மம்தா பானர்ஜி. படம்: ஊடகம் -

கோல்­கத்தா: நடப்பு சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி 200 தொகு­தி­க­ளுக்­கும் மேல் கைப்­பற்­றும் என அக்­கட்­சி­யின் தலை­வ­ரும் மேற்கு வங்க மாநில முதல்­வ­ரு­மான மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

ஹூக்ளி மாவட்­டத்­தில் நடந்த பிர­சார கூட்­டத்­தில் கலந்து கொண்டு பேசிய அவர், மேற்கு வங்க தேர்­த­லில் தம்­மால் ஒற்­றைக் காலில் நின்று வெற்­றி­பெற முடி­யும் என்­றார்.

மேலும், எதிர்­கா­லத்­தில் இரு கால்­கள் கொண்டு டெல்­லி­யி­லும் தம்­மால் வெற்­றி­பெற முடி­யும் என அவர் சூளு­ரைத்­தார்.

"இம்­முறை நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் நான் வெற்றி பெறு­வேன். ஆனால் இந்­தத் தேர்­தல் என்னை பற்­றி­யது மட்­டு­மல்ல, மாறாக திரி­ணா­முல் காங்­கி­ரஸ் 200 தொகு­தி­க­ளுக்கு மேல் வெற்றி பெறு­வ­தற்­கான உறு­தியை நீங்­கள் அளிக்க வேண்­டும்.

"இல்­லை­யென்­றால் பாஜ­க­வி­னர் பண­ப­லத்தை வைத்து துரோ­கி­களை விலைக்கு வாங்­கி­வி­டு­வார்­கள்," என்­றார் முதல்­வர் மம்தா.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை வேக­மெ­டுத்து வரும் நிலை­யில், மேற்கு வங்க மாநி­லத்­தில் எட்டு கட்­டங்­க­ளாக தேர்­தல் நடத்­தப்­ப­டு­வதை ஏற்க இய­லாது என்று குறிப்­பிட்ட அவர், ஏன் குறு­கிய காலத்­துக்­குள் தேர்­தலை நடத்தி முடித்­தி­ருக்­கக் கூடாது எனக் கேள்வி எழுப்­பி­னார்.

"மேற்கு வங்­காள தேர்­த­லில் நிறுத்­து­வ­தற்கு பாஜ­க­வில் உள்­ளூர் தலை­வர்­கள் யாரும் இல்லை. அவர்­க­ளது வேட்­பா­ளர்­கள் அனை­வ­ரும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் அல்­லது மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்டு கட்­சி­யி­ன­ரி­டம் இருந்து வாங்­கப்­பட்­ட­வர்­கள். காலில் காயம் ஏற்­பட்ட நிலை­யி­லும் இந்த தேர்­த­லில் வெற்றி பெறு­வேன் என்ற நம்­பிக்கை உள்­ளது," என்று முதல்­வர் மம்தா மேலும் தெரி­வித்­தார்.