புதுடெல்லி: விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் முத்தம் கேட்ட பயணி மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லியிலிருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட விமானத்தில் நடந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து ஆண் பயணி தன் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். பின்னர் விமானப் பணிப்பெண்களிடம் சென்று அவர் முத்தம் கேட்டுள்ளார்.
அவர் போதையில் கேட்டிருக்கலாம் என்று ஊழியர்கள் சந்தேகித்தனர்.
ஆனால் அந்த நபர் விமானக் குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு உடைகளை அணிந்து இருக்கையில் அமர்ந்தார்.
பெங்களூரில் விமானம் தரையிறங்கியதும் அந்த நபர் மீண்டும் தன் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அந்த நபர் தன் உடைகளை மீண்டும் அணிந்தார்.
இதையடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அடுத்த 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க அவருக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.