28 நாடுகளுடன் இந்தியா விமானப் பயண ஏற்பாடுகள்

28 நாடுகளுடன் இந்தியா விமானப் பயண ஏற்பாடுகள்

2 mins read
69f09b03-a024-4f6c-b2d1-fb5cdc423465
-

புது­டெல்லி: கொவிட்-19 கார­ண­மாக முடங்­கிக் கிடக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்து தொழில்­து­றையை உசுப்­பி­வி­டும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக இந்­திய அர­சாங்­கம் பல்­வேறு நாடு­க­ளு­டன் இரு தரப்பு விமா­னப் போக்­கு­வ­ரத்து உடன்­பாடு­க­ளைச் செய்­து­கொண்டுள்ளது.

இது­வ­ரை­யில் மொத்­தம் 28 நாடு­க­ளுக்குப் பய­ணி­கள் பறந்து செல்ல முடி­யும் என்று இந்­திய அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

இந்­தத் தற்­கா­லிக இரு தரப்பு ஏற்­பாட்­டின்­படி இந்­தி­யா­ மற்றும் 28 நாடு­க­ளைச் சேர்ந்த விமான நிறு­வ­னங்­கள், பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள், நிபந்­த­னை­க­ளு­டன் விமா­னச் சேவை­களை நடத்த முடி­யும்.

இந்­தப் பட்­டி­ய­லில் புதி­தாக இலங்கை சேர்க்­கப்­பட்டு இருப்­ப­தாக இந்­தி­யா­வின் விமா­னப் போக்கு­வ­ரத்து அமைச்சு நேற்று தெரி­வித்­தது. இதன்­படி இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கும் இடை­யில் சிறப்பு அனைத்­து­லக விமா­னங்­கள் விரை­வில் தொடங்­கும் என்­றும் அந்த அமைச்சு கூறியது.

இலங்­கை­யை­யும் சேர்த்து சார்க் எனப்­படும் தெற்கு ஆசிய நாடு­கள் அமைப்பில் இத்­த­கைய ஆறு உடன்­பா­டு­கள் எட்­டப்­பட்டுள்ளன.

கொவிட்-19 கார­ண­மாக அனைத்­து­லக விமா­னச் சேவை­களை 2020 மார்ச் 23 முதல் இந்­தியா நிறுத்­தி­வைத்து இருக்­கிறது.

இருந்­தா­லும் விமா­னப் போக்கு­வரத்து தொழில்­து­றைக்கு ஊக்­க­மூட்­டும் நோக்­கத்­து­டன் அது பல்­வேறு நாடு­க­ளு­டன் இரு தரப்பு தற்­கா­லிக விமா­னப் பயண ஏற்­பாடு­க­ளைச் செய்துகொண்டுள்ளது.

ஆப்­கா­னிஸ்­தான், பஹ்­ரைன், பங்­ளா­தேஷ், பூட்­டான், கனடா, எத்­தி­யோ­ப்பியா, பிரான்ஸ், ஜெர்­மனி, ஈராக், ஜப்­பான், கென்யா, குவைத், மாலத்­தீவு, நேப்­பா­ளம், நெதர்­லாந்து, நைஜீ­ரியா, ஓமன், கத்­தார், ரஷ்யா, ருவாண்டா, சீசெல்ஸ், இலங்கை, தான்­சா­னியா, உக்­ரைன், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், பிரிட்­டன், அமெ­ரிக்கா, உஸ்­பெக்­கிஸ்­தான் ஆகி­யவை அந்த நாடு­கள்.

இவற்­றுக்கு இடை­யில் இந்­தி­யப் பய­ணி­கள் விமா­னப் பய­ணங்­களை மேற்­கொள்ள முடி­யும்.

பிரான்ஸ், ஜெர்­மனி, அமெ­ரிக்­கா­வுக்கு இடை­யில் இந்­தியா ஏற்­கெ­னவே தனிப்­பட்ட முறை­யில் இரு தரப்பு விமா­னப் பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்டு இருக்­கிறது. இதன்­படி இந்த நாடு­க­ளைச் சேர்ந்த விமான நிறு­வ­னங்­கள், அனைத்­து­லக விமா­னச் சேவையை நடத்த முடி­யும்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு அனைத்துலக விமானச் சேவைகள் இந்தியாவுக்கும் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த நகர்களுக்கும் இடையில் இப்போது நடந்து வருகின்றன.

இருதரப்பு உடன்பாட்டில் இலங்கையும் இணைப்பு; விரைவில் விமானச் சேவை தொடங்கும்