தொடர்ந்து உச்சம்: மிரட்டும் அன்றாட தொற்று எண்ணிக்கை

ஒரே நாளில் 168,912 பேர் புதிதாக பாதிப்பு; ரஷ்ய தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் சுமார் 4 மில்­லி­யன் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்ள நிலை­யில், புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களும் ஒரே நாளில் 168,912ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஒரு­வார கால­மாக அன்­றா­டம் புதி­தா­கப் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து ஏறு­மு­க­மாக இருந்து வரு­கிறது.

இத­னால் ஒட்­டு­மொத்த பாதிப்பு 13.50 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது என்­றும் மகா­ராஷ்­டிரா, கேரளா, கர்­நா­டகா, தமி­ழ­கம், சத்­தீஸ்­கர், ஆந்­திரா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளின் தொற்­றுப்­ப­ர­வ­லின் வேகம் அதிகரித்­துள்­ள­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மகா­ராஷ்­டி­ரா­வில் அதிக அள­வாக ஒரே நாளில் 63,294 பேரும் டெல்­லி­யில் 10,774 பேரும் புதி­தாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்று முன்­தி­னம் 904 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

மும்­பை­யில் சுமார் 600,000க்கும் அதி­க­மா­னோர் தங்­களை வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டுள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் கொவிட்-19 பாதிப்­புக்­காக சிகிச்சை பெற்று வரு­ப­வர்­கள் எண்­ணிக்கை 1.20 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே, பெங்­க­ளூ­ரு­வில் நாளுக்கு நாள் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால் மீண்­டும் முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்த வாய்ப்பு இருப்­ப­தாக முதல்­வர் எடி­யூ­ரப்பா எச்­ச­ரித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 9,579 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் கடந்த சனிக்­கிழமை முதல் பெங்­க­ளூரு, மைசூரு, மங்­க­ளூரு உள்­ளிட்ட எட்டு நக­ரங்­களில் இரவு நேர­‌ ஊரடங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் ரஷ்ய தயா­ரிப்­பான ‘ஸ்புட்­னிக் வி’ கொரோனா தடுப்­பூ­சியை இந்­தி­யா­வில் அவ­சர காலப் பயன்­பாட்­டுக்­குப் பயன்­ப­டுத்த மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இதை­ய­டுத்து நாட்­டில் தற்­போது மூன்­றா­வது தடுப்­பூசி பயன்­பாட்­டுக்கு வர உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!