லோக் ஆயுக்தா தீர்ப்பால் பதவி விலகிய கேரள அமைச்சர்

திரு­வ­னந்­த­புரம்: தமது பத­வி­யை­யும் அதி­கா­ரத்­தை­யும் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­காக தவ­றா­கப் பயன்­ப­டுத்தி உள்­ளார் என்று லோக் ஆயுக்தா நீதி­மன்­றம் அளித்த தீர்ப்பை அடுத்து கேரள உயர்­கல்வி அமைச்­சர் கே.டி.ஜலீல் பத­வி­யில் இருந்து வில­கி­யுள்­ளார்.

இது தொடர்­பாக தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

தமது பதவி வில­கல் முடி­வா­னது தம்மை எதிர்ப்­ப­வர்­க­ளுக்கு தற்­கா­லிக நிம்­மதி அளித்­தி­ருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கேரள மாநில சிறு­பான்­மை­யி­னர் மேம்­பாட்டு நிதிக்­க­ழ­கத்­தின் பொது மேலா­ள­ராக கே.டி.அதீப் என்­ப­வரை நிய­மித்­தார் கே.டி.ஜலீல். எனி­னும் அதீப் அமைச்­ச­ரின் உற­வி­னர் என்­பது பின்­னர் தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து தமது பத­வியை அவர் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தாக விமர்­ச­னங்­கள் எழுந்­தன.

இது தொடர்­பாக லோக் ஆயுக்­தா­வில் அளிக்­கப்­பட்ட புகார் மீதான விசா­ர­ணை­யின் முடி­வில் அமைச்­சர் கே.டி.ஜலீல் தமது பத­வியை தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தாக தீப்பு அளிக்­கப்­பட்­டது. இத­னால் அவர் பதவி வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ளார்.

அமைச்­சர் ஜலீல் தமது பத­வி­யைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது என்­றும் அவர் உட­ன­டி­யாக பத­வி­யில் இருந்து விலக வேண்­டும் என்­றும் லோக் ஆயுக்தா கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்­தது.

மேலும் அமைச்­ச­ரின் செயல்­பாடு­க­ளை­யும் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது.

முன்­ன­தாக கடந்த 2016ஆம் ஆண்டு கேரள தொழில்­துறை அமைச்­சர் ஜெய­ரா­ஜ­னும் இதே போன்ற குற்­றச்­சா­ட்டு­க­ளால் பதவி விலக நேர்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!