தொற்று மரணங்களை ம.பி. அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு

தொற்று மரணங்களை ம.பி. அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு

1 mins read
f5bc6fad-43e5-45fc-8c7e-93becd01afe5
-

போபால்: மத்­திய பிர­தேச மாநி­லத்­தில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரும் நிலை­யில் சுடு­கா­டு­களில் தக­னம் செய்­வ­தற்­காக ஏரா­ள­மான சட­லங்­கள் வந்த­வண்­ணம் உள்­ளன. ஆனால் அரசு வெளி­யி­டும் புள்ளி விவ­ரங்­க­ளுக்­கும் இந்த மர­ணங்­க­ளுக்­கும் இடையே முரண்­பாடு உள்­ள­தாக சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

தொற்று மரண எண்­ணிக்­கையை மத்­திய பிர­தேச மாநில அரசு குறைத்­துக் கூறு­வ­தாக மக்­கள் சந்­தே­கம் எழுப்­பு­கின்­ற­னர். போபா­லில் உள்ள பட்­படா தகன மையத்­தில், திங்­கட்­கி­ழமை மட்­டும் 37 சட­லங்­கள் தக­னம் செசெய்­யப்­பட்­டுள்­ளன. எனி­னும் மாநில சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள தக­வ­லில் மாநி­லம் முழு­வ­தும் 37 பேர் தொற்று பாதிப்­பால் மர­ணம் அடைந்­த­தாக கூறப்­பட்­டுள்­ளது. இதே­போல் கடந்த ஐந்து நாட்­க­ளின் புள்­ளி­வி­வ­ரங்­களும் முர­ணாக உள்­ளன.

ஆனால் கொரோனா மர­ணங்­களை மறைப்­ப­தாக எழுந்த குற்­றச்­சாட்டை ம.பி. மாநில அர­சாங்­கம் மறுத்­துள்­ளது.