ரூ.100 கோடி லஞ்சம்: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரிடம் விசாரணை

ரூ.100 கோடி லஞ்சம்: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரிடம் விசாரணை

1 mins read
e6f61fe0-1be1-43eb-861c-c5d2461131b4
-

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் முன்­னாள் உள்­துறை அமைச்­சர் அனில் தேஷ்­முக் மீதான லஞ்­சப் புகார் குறித்து சிபிஐ விசா­ரிக்­கும்­படி மும்பை உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் குற்­றச்­சாட்­டுக்கு ஆதா­ரம் இருந்­தால் வழக்குப் பதி­யும்­படி சிபிஐ அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த உத்­த­ரவை ரத்து செய்­யக்­கோரி அனில் தேஷ்­முக் மற்­றும் மகா­ராஷ்­டிரா அரசு தரப்­பில் உச்ச­நீ­தி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டன. இதை­ய­டுத்து, சிபிஐ விசா­ர­ணையைத் தொடங்­கி­யது. விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­கு­மாறு அனில் தேஷ்­முக்­கிற்கு சிபிஐ சம்­மன் அனுப்­பி­யிருந்­தது. அதன்­பே­ரில், நேற்று காலை மும்பை சான்­டா­கு­ரூஸ் பகு­தி­யில் உள்ள டிஆர்­டிஓ விருந்­தி­னர் மாளி­கையில் முன்னிலையான அனில் தேஷ்முக்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.