ஹரித்துவாரில் 2 நாட்களில் 1,000 பேருக்கு கொரோனா

ஹரித்துவாரில் 2 நாட்களில் 1,000 பேருக்கு கொரோனா

1 mins read
3ea884f7-10ed-47dd-9e8e-2c5a7d51fb63
-

ஹரித்­வார்: உத்­த­ர­காண்ட் மாநி­லம் ஹரித்­துவார் நக­ரின் கங்கை நதிக்­க­ரை­யில் கடந்த 1ஆம் தேதி முதல் கும்ப மேளா திரு­விழா நடை­பெற்று வரு­கிறது. 30ஆம் தேதி வரை கும்ப மேளா நடை­பெற உள்­ளது. ஏப்­ரல் 12, 14 மற்­றும் 27 ஆகிய தேதி­கள் புனித நீரா­ட­லுக்கு முக்­கிய நாட்­கள் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஏரா­ள­மான பொது­மக்­கள், துற­வி­கள் மற்­றும் அகோ­ரி­கள் புனித நீரா­டக் குவிந்தனர்.

இந்­நி­லை­யில், ஹரித்­துவா­ரில் மட்­டும் கடந்த 2 நாட்­களில் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழமை 408 பேருக்­கும், செவ்­வாய்க்­கி­ழமை 594 பேருக்­கும் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. உத்­த­ர­காண்ட் மாநி­லம் முழு­வ­தும் தின­சரி பாதிப்பு எண்­ணிக்கை 1900க்கும் மேல் பதி­வா­கிறது.

உத்­த­ர­காண்­டில் இது­வரை 1.12 லட்­சம் பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், 1,780 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.