புதுடெல்லி: எதிர்வரும் 21ஆம் தேதி அன்று டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்ல இருப்பதாக பஞ்சாப் மாநில விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் தங்களுடைய உரிமைகளை அடையும் வரை போராட்டம் நீடிக்கும் என அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் அனுமதி கிடைக்காவிட்டாலும் கூட திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் 141வது நாளாக நேற்றும் நீடித்தது. பஞ்சாப் விவசாயிகளின் பேரணிக்கு பல விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

