புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி 'ஐ.என்.சி. டிவி' என்ற பெயரில் 'யூடியூப் சேனல்' தொடங்கியுள்ளது.
வரும் 24ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த சேனலில் தினமும் எட்டு மணி நேரம் நேரலை நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்
களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரின் பிறந்த தினத்தில் காங்கிரஸ் கட்சியின் 'யூடியூப் சேனல்' தொடங்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றார்.

