புதிய தந்திரங்களைக் கையாளும் சீனா: தளபதி குற்றச்சாட்டு

புதிய தந்திரங்களைக் கையாளும் சீனா: தளபதி குற்றச்சாட்டு

1 mins read
d12377c5-a287-4dd2-9e6d-6127c3de8346
பிபின் ராவத். படம்: ஊடகம் -

புது­டெல்லி: பல்வேறு விதமாக முயன்றும் சீனாவால் இந்தியாவுக்குச் சொந்தமான நிலத்தின் ஓர் அங்குலத்தைக் கூட கைப்பற்ற முடியவில்லை என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காணொளி வழி நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், சீனாவின் தந்திரங்கள் இந்தியாவிடம் பலிக்காது என்றார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான எல்­லைக் கோட்டை மாற்ற சீனா மிக கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், எல்­லை­யில் தள்­ளு­முள்ளு தந்­தி­ரத்தை சீனா கையாண்­டது என்­றார்.

"இது எங்­கள் வழி என்று சொல்லி யாருக்­கும் வழி­விடக் கூடாது என்பதே சீனா­வின் கொள்­கை­யாக உள்­ளது. அதே­நேரம் இந்­தியா உலக நாடு­க­ளு­டன் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­கிறது. அனைத்­து­ல­கச் சமூ­கம் இந்­தி­யா­வுக்­குப் பக்­க­ப­ல­மாக நிற்­கிறது," என்­றார் பிபின் ராவத்.

சீனா இப்­போது வேறு புதிய தந்­தி­ரங்­க­ளைக் கையாண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி இந்­தி­யா­வின் வங்­கி­கள், மின் விநி­யோ­கம், போக்கு­வ­ரத்து, தக­வல் தொழில்­நுட்பக் கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்றைச் சீர்­கு­லைக்க அந்­நாடு முயற்சி செய்து வரு­வ­தா­க­வும் சாடி­னார். எனி­னும் அனைத்து சவால்­க­ளை­யும் முறி­ய­டிக்­கும் திறன் இந்­தி­யா­வி­டம் உள்­ளது என்­றார் தலை­மைத் தள­பதி.

"ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து அமெ­ரிக்கா தன் படை­களை திரும்­பப் பெறு­வது அங்கு வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்­தும்.

"இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி அந்­நாட்­டின் வளங்­க­ளைக் கொள்­ளை­ய­டிக்க சில நாடு­கள் முயற்சி செய்து வரு­கின்­றன. இதை உலக நாடு­கள் தடுக்க வேண்­டும்," என்­றார் பிபின் ராவத்.