இந்தியா, பாகிஸ்தான் பேச்சு: அமீரகம் தகவல்

இந்தியா, பாகிஸ்தான் பேச்சு: அமீரகம் தகவல்

1 mins read
ada9c102-21a2-452e-b4df-a81e47151153
-

புது­டெல்லி: காஷ்­மீர் விவ­கா­ரம் தொடர்­பாக இந்­தியா, பாகிஸ்­தான் இடை­யே­யான பேச்­சு­வார்த்­தைக்கு ஏற்­பாடு செய்­ததை ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ரசு உறுதி செய்­துள்­ளது.

எல்­லைப் பிரச்­சினை தொடர்­பாக இரு நாடு­களும் ஒரு ஒப்­பந்­தத்தை எட்ட பிப்­ர­வரி மாதம் நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை உத­வி­ய­தாக அமெ­ரிக்­கா­வுக்­கான ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் தூதர் யூசப் அல் ஒடைபா கூறி­யுள்­ளார்.

எனி­னும் இந்த பேச்­சு­வார்த்தை குறித்து இந்­திய வெளி­யு­றவு அமைச்சு இது­வரை எந்த அறி­விப்­பை­யும் வெளி­யி­ட­வில்லை. ஆனால் ஊட­கங்­களில் செய்தி வெளி­யாகி உள்­ளது.

"அண்­மைய பேச்­சுக்­க­ளால் இரு நாடு­களும் நெருங்­கிய கூட்­டா­ளி­க­ளாக மாறப்­போ­வ­தில்லை. எனி­னும் குறைந்­த­பட்ச பேச்­சு­வார்த்­தை­யே­னும் நடை­பெ­று­வதை உறுதி செய்ய வேண்­டி­யுள்­ளது," என்று யூசப் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய, பாகிஸ்­தான் உளவு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த உயர் அதி­கா­ரி­கள் துபா­யில் ரக­சி­யப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.