லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அங்கு தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் பத்து மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளி பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் இரண்டு முறை பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறை கிருமி தொற்றியுள்ளது.

