'ககன்யான்' திட்டத்துக்கு பிரான்ஸ் உதவி

'ககன்யான்' திட்டத்துக்கு பிரான்ஸ் உதவி

1 mins read
a548d3d4-984c-4cfe-b2a1-b861e9d50461
-

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு உதவ பிரான்ஸ் முன்வந்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி இந்திய விண்வெளி வீரர்கள், அதிகாரிகளுக்கு பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் அதிர்வுகள், கதிரியக்கம் போன்றவற்றை தாங்குவதற்காக பிரான்சில் தயாரிக்கப்பட்ட தீப்பிடிக்காத பைகள் இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும்.

படம்: ஊடகம்