மேற்கு வங்கம்: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு; பலத்த பாதுகாப்பு

மேற்கு வங்கம்: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு; பலத்த பாதுகாப்பு

2 mins read
e75aa0cd-fb66-4be0-8a91-902434a1de2d
-

கோல்­கத்தா: மேற்கு வங்­கத்­தில் இன்று சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­கான ஐந்­தாம் கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்­ளது.

மொத்­தம் 45 தொகு­தி­களில் வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும் என்­றும் அப்­ப­கு­தி­களில் உரிய பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் எட்டு கட்­டங்­க­ளாக நடை­பெ­று­கிறது. இது­வரை நான்கு கட்ட வாக்­குப்­ப­திவு முடி­வ­டைந்­துள்­ளது. வாக்­குப்­ப­தி­வின் போது ஏற்­பட்ட வன்­மு­றைச் சம்­ப­வங்­களில் ஐந்து பேர் பலி­யாகி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து மீதம் இருந்த நான்கு கட்ட வாக்­குப்­ப­தி­வு­களை ஒரே நாளில் நடத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அம்­மா­நில முதல்­வ­ரும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வ­ரு­மான மம்தா பானர்ஜி வலி­யு­றுத்­தி­னார்.

தேர்­தல் பிர­சா­ரத்­தால் மேற்கு வங்­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் அதி­க­ரிப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார். எனினும் அவ­ரது கோரிக்­கையை ஏற்க இய­லாது என தேர்­தல் ஆணை­யம் திட்­ட­வட்­ட­மா­க தெரி­வித்­துள்­ளது.

மீத­முள்ள மூன்று கட்ட வாக்குப் பதி­வு­க­ளின்­போது மேற்­கொள்ளப்­பட வேண்­டிய கூடு­தல் பாது­காப்பு அம்­சங்­கள் குறித்து நேற்று தேர்தல் ஆணை­யம் ஆலோ­சனை நடத்­தி­யது.

இன்று தேர்­தல் நடை­பெற உள்ள 45 தொகு­தி­களில் 319 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர். 1.12 கோடிக்­கும் அதி­க­மான வாக்­கா­ளர்­கள் தங்­கள் பிர­தி­நி­தி­களைத் தேர்வு செய்ய உள்­ள­னர்.

இதற்­கி­டையே நேற்று முன்­தினம் கோல்­கத்­தாவில் நடை­பெற்ற பிரம்­மாண்டப் பேர­ணி­யில் முதல்­வர் மம்தா கலந்து கொண்­டார். சுமார் நான்கு கிலோ மீட்­டர் தூரத்­துக்கு சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­த­ப­டியே பேர­ணிக்குத் தலைமை­யேற்ற அவர், மேற்கு வங்க மாநி­லத்­தின் வளர்ச்­சிக்­காக தாம் பல்­வேறு பய­னுள்ள திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி இருப்­ப­தாக குறிப்­பிட்­டார்.