மாதத்திற்கு 100 மி. கொவேக்சின் தடுப்பூசி உற்பத்தி: அரசு தீவிரம்

மாதத்திற்கு 100 மி. கொவேக்சின் தடுப்பூசி உற்பத்தி: அரசு தீவிரம்

2 mins read
4ecfb133-ef76-4db0-81ae-dab36242ec57
தலைநகர் டெல்லியில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர் களை அடக்கம் செய்ய நேற்று நடைபெற்ற முயற்சிகள். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: உள்­நாட்­டில் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தால் தயா­ரிக்­கப்­படும் கொவேக்சின் தடுப்­பூ­சி உற்பத்தியை மாதந்தோறும் 10 கோடி (100 மில்லியன்) தடவை போடக்கூடிய அளவுக்கு உயர்த்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

தற்­போ­தைய தடுப்பூசி உற்­பத்தி மே-ஜூன் மாதங்­களில் இரட்­டிப்­பாக்­கப்­படும் என்­றும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்­களில் 6 முதல் 7 மடங்­காக உற்­பத்தி அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் மத்­திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரி­வித்துள்­ளது.

அதா­வது, இந்த மாதம் 1 கோடி­யாக (10 மில்லியன்) இருக்­கும் கோவாக்­சின் தடுப்­பூசி உற்­பத்தி, ஜூலை-ஆகஸ்ட் மாதத்­தில் 6 (60 மி.) முதல் 7 கோடி­யாக (70 மி.) அதி­க­ரிக்­கப்­படும். இது செப்­டம்­ப­ரில் சுமார் 10 கோடி­யாக (100 மில்லியன்) அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்ப்பதாகவும் இந்தத் துறை நேற்று முன்தினம் கூறியது.

தடுப்­பூசி உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக சில வாரங்­க­ளுக்கு முன் இந்­தி­யா­வில் இரண்டு முக்­கிய தடுப்­பூசி உற்­பத்தி மையங்­களை மத்­திய அமைச்­சு­க­ளுக்கு இடை­யே­யான குழுக்­கள் பார்­வை­யிட்­டன. அப்­போது தடுப்­பூசி தயா­ரிப்­பா­ளர்­க­ளு­டன் விரி­வான ஆய்வு நடத்­தப்­பட்­டது.

உற்­பத்தி அதி­க­ரிப்­புத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, கட்­ட­மைப்பு மற்­றும் தொழில்­நுட்­பங்­க­ளு­டன் ஹைத­ரா­பாத் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் உற்­பத்­தித்­தி­ற­னும் இதர பொதுத்­து­றைத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளின் உற்­பத்­தித்­தி­ற­னும் மேம்­ப­டுத்­தப்­­பட உள்­ளன.

பெங்­க­ளூ­ரில் அமைக்­கப்­படும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் புதிய மையத்­துக்கு சுமார் ரூ.65 கோடி மத்­திய அரசு சார்­பில் மானி­ய­மாக வழங்­கப்­ப­டு­கிறது. தடுப்­பூசி உற்­பத்­தியை அதி­க­ரிக்­கும் வகை­யில் இந்த மையம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­கிறது. கொவேக்சின் உற்­பத்­தியை அதி­க­ரிக்க மூன்று பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்­கும் நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­கிறது.

தடுப்­பூசி தயா­ரிக்க மும்­பை­யில் மகா­ராஷ்­டிர அர­சின்­கீழ் செயல்­படும் பொதுத்­துறை நிறு­வ­ன­மான ஹஃப்கைன் பயோ­ஃபார்­ம­சூட்­டி­கல்ஸ் நிறு­வ­னத்திற்கு 65 கோடி ரூபாயை மத்­திய அரசு வழங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இப்­ப­ணியை மேற்­கொள்ள 12 மாத கால அவ­கா­சம் கேட்­டது ஹஃப்கைன். ஆனால், ஆறு மாதங்­க­ளுக்­குள் வேலை­களை முடித்து உற்­பத்­தி­யைத் தொடங்­கு­மாறு மத்­திய அரசு கேட்­டுக்­கொண்டுள்­ளது. இந்த மையம் செயல்­ப­டத் தொடங்­கும்­போது மாதத்­துக்கு 20 மில்­லி­யன் தடவை போடு­வ­தற்­கான கொவேக்சின் தடுப்­பூ­சி­களை தயா­ரிக்க முடி­யும்.