கொரோனாவை 'பிரசாத'மாக தந்துவிடாதீர்கள்: மும்பை மேயர்

கொரோனாவை 'பிரசாத'மாக தந்துவிடாதீர்கள்: மும்பை மேயர்

1 mins read
a0eaa0c4-b583-4aed-abc3-ce9e5c20e585
-

மும்பை: கும்­ப­மேளாவை முடித்து மும்பை திரும்­பு­ம் அனைவரையும் தனி­மைப்­ப­டுத்­து­வது குறித்து முடிவு எடுக்கப்படும் என மும்பை பெரு­ந­கர மேயர் கிஷோரி பெட்நே­கர் (படம்) கூறியுள்ளார். தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டால் அதற்­கான செலவு முழு­வ­தை­யும் அவர்களே ஏற்­க வேண்­டும் என்று நேற்று அவர் தெரிவித்தார்.

"உத்­த­ர­காண்­டின் ஹரித்­து­வா­ரில் நடை­பெ­றும் கும்­ப­மேளா விழா வை முடித்­துக்­கொண்டு அந்­தந்த மாநி­லங்­க­ளுக்­குத் திரும்பிச் செல்­வோர் கொரோனா கிரு­மியை 'பிர­சாத' மாக வழங்­கி­வி­டக்­கூ­டாது.

"குறிப்­பாக, ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு வரும் மகா­ராஷ்­டிர மாநி­லத்­துக்கு அவர்­கள் மூலம் கிருமி பரவி விடக்­கூ­டாது.

"அவர்­கள் அனை­வ­ரும் திரும்­பிச்­செல்­லும் மாநி­லங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு அதற்­கான செலவை அவர்­க­ளி­டம் வசூ­லிக்க வேண்­டும். மும்­பை­யில் அவ்­வாறு செய்­வது பற்றி யோசித்து வரு­

கி­றோம்," என்று ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் கிஷோரி கூறி­னார்.

கங்கை ஆற்­றின் கரை­களில் பல்­லா­யி­ரம் பக்­தர்­கள் ஒன்­று­கூடி கும்­ப­மே­ளா­வைக் கொண்­டாடி வரு­வது இந்­தி­யா­வில் கிரு­மிப் பர­வல் வேகம் எடுத்­தி­ருப்­ப­தற்கு முக்­கிய கார­ண­மா­கச் சொல்­லப்­படு­கிறது. இந்­நி­லை­யில் மும்­பை­யில் முழு­மை­யான முடக்­கம் அறி­விக்­கப்­பட வேண்­டும் என்று மேயர் கிஷோரி கூறி உள்­ளார். "95 விழுக்­காடு மும்பை மக்­கள் கொவிட்-19 விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­னா­லும் எஞ்­சிய 5 விழுக்­காட்­டி­ன­ரால் மற்­ற­வர்­க­ளுக்கு கிருமி பர­வும் அபா­யம் உள்­ளது," என்­றார் இவர்.