புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை 45லிருந்து 25ஆகக் குறைக்க வேண்டும் என காங்கி ரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங் களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். "ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது ஏழைகளை மட்டுமின்றி பொருளியல் நடவடிக்கைகளையும் பாதிக்கும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதி யான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூ.6,000 செலுத்த வேண்டும்," என்றும் அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
25 வயதினருக்கு தடுப்பூசி: சோனியா
1 mins read
-

