தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மம்தா தொலைபேசி ஒட்டுக்கேட்பு

1 mins read
d4542a3e-c1a6-4f37-957e-8a0a1548e200
-

கோல்கத்தா: தமது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் தெரிவித்தார். தமது ஆட்சி யின் வளர்ச்சித் திட்டங்கள் பிரசாரம் செய்யப்படுவதைப் பொறுத்துக்கொள்ளாத பாஜக இதுபோன்ற சதித்திட்டத்தில் ஈடு படுவதாகவும் அவர் கூறினார். "அவர்கள் (பாஜக தலைவர்கள்) எங்கள் அன்றாட உரையாடலைக் கூட ஒட்டுக்கேட்கிறார்கள். இந்த விவகாரத்தில் சிஐடி விசா ரணைக்கு உத்தரவிடுவேன். இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரையும் நான் சும்மா விடமாட்டேன்," என்றார் மம்தா.