செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
77617af4-4656-4730-91ec-5484c4d51a0e
-

முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம்

புதுடெல்லி: மத்திய ரயில்வே துறை நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ரயில்களில் பயணம் செய்வோரும் ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள், உடன் வருவோர் மற்றும் ரயிலில் பயணம் செய்வோருக்கு ரயில்வே சட்டத்தின் படி ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்," என தெரிவிக்கப் பட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க புதிய விதிகள்

புது­டெல்லி: காசோலை மோசடி வழக்­கு­களை விரைந்து விசா­ரிக்க புதிய விதி­களை உச்ச நீதி­மன்­றம் அறி­வித்து உள்­ளது. தலைமை நீதி­பதி எஸ்.ஏ.பாப்டே தலை­மை­யி­லான அர­சி­யல் சாசன அமர்வு இதனை வெளி­யிட்­டுள்­ளது. "ஓராண்­டுக்­குள் ஒரே பணப் பரி­மாற்­றம் தொடர்­பாக ஒரே நப­ருக்கு எதி­ராக தாக்­கல் செய்­யப்­படும் காசோலை மோசடி வழக்­கு­கள் அனைத்­தை­யும் ஒரே வழக்­காக விசா­ரிக்­கும் வகை­யில் சட்­டத்­தி­ருத்­தம் இருக்கவேண்­டும் என பரிந்­து­ரைக்­கி­றோம். காசோலை மோசடி வழக்­கு­களில் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு எதி­ராக அளிக்­கப்­படும் அழைப்­பா­ணையை அவர் தொடர்­பு­டைய அனைத்து காசோலை மோசடி வழக்­கு­க­ளுக்­கு­மான அழைப்­பா­ணை­யா­கக் கருதவேண்­டும் என தெரி­வித்து அதற்­கான உத்­த­ர­வு­களை விசா­ரணை நீதி­மன்­றங்­க­ளுக்கு உயர் நீதி­மன்­றங்­கள் பிறப்­பிக்க வேண்­டும்," என்று அமர்வு தெரி­வித்து உள்­ளது.

குமாரசாமிக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்புகொண்ட அனைவருமே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

நிரவ் மோடி நாடுகடத்தலுக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி

புது­டெல்லி: மும்­பை­யில் உள்ள பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில் ரூ.14 ஆயி­ரம் கோடி மோசடி செய்து வெளி­நாடு தப்­பிச் சென்று தலை­ம­றை­வான குஜ­ராத்­தைச் சேர்ந்த பிர­பல வைர வியா­பாரி நிரவ் மோடி கைது செய்­யப்­பட்டு தென்­மேற்கு லண்­ட­னில் உள்ள வான்ட்ஸ்­வொா்த் சிறை­யில் அடைக்­கப்­பட்டாா். அவரை இந்­தி­யா­வுக்கு நாடு கடத்தி வரு­வ­தற்­கான முயற்­சி­களை அம­லாக்­கத் துறை­யும் சிபி­ஐ­யும் மேற்­கொண்­டுள்­ளன. லண்­ட­னில் உள்ள வெஸ்ட்­மின்ஸ்டா் மாஜிஸ்­தி­ரேட் நீதி­மன்ற நீதி­ப­தி­யின் உத்­த­ரவை ஏற்று நீரவ் மோடியை இந்­தி­யா­வுக்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்­துறை அமைச்சா் ஒப்­பு­தல் அளித்­துள்­ளார். அதே­வே­ளை­ நாடு கடத்­தும் உத்­த­ரவை எதிர்த்து பிரிட்டிஷ் உச்ச நீதி­மன்­றத்­தில் நிரவ் மோடி மேல்­

மு­றை­யீடு செய்யவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

பிணை: வீடு திரும்புகிறார் லாலு

புது­டெல்லி: மாட்­டுத் தீவன ஊழல் வழக்­கில் ராஷ்ட்­ரீய ஜனதா தளக் கட்­சித் தலைவா் லாலு பிர­சாத் யாத­வுக்கு ஜார்க்­கண்ட் உயர் நீதி­மன்­றம் நேற்று பிணை வழங்கி உத்­த­ர­விட்­டது. லாலு மீது தொட­ரப்­பட்ட நான்கு வழக்­கு­களில் மூன்­றில் அவ­ருக்கு ஏற்­க­னவே பிணை வழங்­கப்­பட்­டு­விட்ட நிலை­யில் நேற்­றைய பிணை மூலம் அவர் விடு­த­லை­யாகி வீடு திரும்ப வழி ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது அவா் உடல்­ந­லக் குறை­வால் டெல்­லி­யில் உள்ள எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கோல்­கத்தா: மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின் 5ஆம் கட்­ட­ வாக்குப்பதிவு 45 தொகு­தி­க­ளில் நேற்­றுக் காலை 7 மணி­ மு­தல் இரவு 7 மணி­வரை நடை­பெற்­றது. மாலை 4 மணி நில­வ­ரப்­படி 69.40 விழுக்­காடு வாக்­கு­கள் பதி­வா­ன­தாக தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­தது. 294 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட மேற்­கு ­வங்க சட்­டப்­பே­ர­வைக்கு 8 கட்­டங்­க­ளாக தேர்தல் நடை­பெ­று­கிறது. வரும் 22, 26, 29 தேதி­களில் இறுதி மூன்று கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும்.