மூன்றாம் அலை விரைவில் வீசலாம்: ஆதித்யா தாகரே எச்சரிக்கை

மூன்றாம் அலை விரைவில் வீசலாம்: ஆதித்யா தாகரே எச்சரிக்கை

1 mins read
5ee33d3c-2e7d-41a5-b4ae-9d68e5a4b5aa
-

மூன்றாம் கொவிட்-19 அலை விரைவில் வீசலாம் என்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர் ஆதித்யா தாகரே தெரிவித்தார். வருங்காலத்தில் கிருமிப்பரவலின் கடுமை அறியப்படாத நிலையில் முன்பே தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது என்று அவர் கூறினார்.

"மாநில அரசாங்கம் எடுத்து வரும் முடிவுகள் ஒவ்வொன்றும் நாங்கள் அமைத்துள்ள பணிக்குழுவின் அடிப்படையில், அறிவியல் மற்றும் மருத்துவ தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது," என்று மகாராஷ்டிராவின் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுப்புற அமைச்சரான திரு தாகரே கூறினார்.

இந்தியாவில் மகாராஷ்டிரா ஆக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தொடர்ந்து உள்ளது. இதுவரை அங்கு 377 ஆயிரம் பேருக்குக் கொவிட்-19 தொற்றியுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் மடிந்தனர்.

பதற்றப்படாமல் நோய்ப்பரவல் குறித்து என்ன செய்யவேண்டும் என்ற பரிந்துரைகளை மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் செய்ய விடும்படி திரு தாகரே பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.