வர்த்தகங்களுக்கு சுமுகத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் முயற்சி

வர்த்தகங்களுக்கு சுமுகத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் முயற்சி

1 mins read
52d3a476-3c07-4354-bb96-2819f2f77074
-

இந்தியாவில் வர்த்தகங்களை நடத்த மேலும் சுலபமாக்குவதற்காக அந்நாட்டு அரசாங்கம் 9,732 சட்ட விதிமுறைகளை மாற்றுகிறது அல்லது ரத்து செய்கிறது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மார்ச் 31ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தக் கட்டத்திற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15ஆம் தேதி என்று இகானமிக் டைம்ஸ் பத்திரிகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் 37 விழுக்காடு நிதியமைச்சை மட்டும் சேர்ந்தவை.

வர்த்தகங்களின் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் நோக்கிலும் இந்திய மத்திய அரசு, தேவையற்ற சிக்கலான விதிமுறைகளை அகற்றும்படி மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.