நலத்திட்டங்களை எல்லாம் மம்தா எதிர்த்தார்: பிரதமர்

நலத்திட்டங்களை எல்லாம் மம்தா எதிர்த்தார்: பிரதமர்

2 mins read
34298555-b885-4ddb-8b73-96f4edd599f6
மே 2ஆம் தேதிக்குப் பிறகு மம்தா பானர்ஜி முன்னாள் முதல்வர் ஆகி விடுவார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

அசன்சோல்: மே 2ஆம் தேதிக்குப் பிறகு மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் முதல்வர் ஆகிவிடுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலையொட்டி அசன்சோல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.

"வங்காள புத்தாண்டுக்குப் பிறகு இதுதான் எனது முதல் பொதுக்கூட்டம். நான்கு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பயந்து போயுள்ளது. பிணங்களை வைத்து மம்தா பானர்ஜி அரசியல் நடத்துகிறார். மே 2ஆம் தேதிக்குப் பிறகு மம்தா பானர்ஜி 'முன்னாள் முதல்வர்' என்ற பட்டத்தைப் பெற்று விடுவார்," என்று மோடி குறிப் பிட்டார்.

"உங்கள் வாக்கு திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்குவதுடன் மாபியா ராஜ்யத்தையும் நீக்கி விடும். அதுதான் உங்கள் வாக்கின் வலிமை. மேற்கு வங்காளத்துக்கு தேவை இரட்டை என்ஜின் அரசுதான். வளர்ச்சியை தடுக்கும் அரசு அல்ல. கடந்த 10 ஆண்டு களாக வளர்ச்சியைத் தடுத்து அவர் துரோகம் செய்துள்ளார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங் களுக்கும் மேற்கு வங்காள மக்களுக்கும் இடையே அவர் சுவர் போல் நின்று கொண்டார். இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களைப் பறித்துக்கொண்டார்.

மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீட்டை அளிக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், மம்தா சுவராக நின்று கொண்டார்.

முத்தலாக்கில் இருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. மம்தா கோபம் அடைந்தார்.

இடைத்­த­ர­கர்­க­ளி­டம் இருந்து விவ­சா­யி­களைப் பாது­காக்க மத்­திய அரசு சட்­டம் இயற்­றி­யது. அதை­யும் எதிர்த்­தார். முன்­பெல்­லாம் வேலை தேடி மக்­கள் அசன்­சோல் நக­ருக்கு வரு­வார்­கள். அந்த அள­வுக்கு எல்லா தொழிற்­சா­லை­க­ளை­யும் இங்கே பார்க்க முடி­யும். ஆனால், இப்­போது இங்­குள்ள மக்­கள் வேலை தேடி வேறு நக­ருக்குச் செல்­கி­றார்­கள். திரி­ணா­முல் காங்­கி­ர­சின் மோச­மான நிர்­வா­கமே இதற்குக் கார­ணம்," என்று பிர­த­மர் மோடி சாடி­னார்.

இதற்­கி­டையே மேற்கு வங்­காள 5ஆம் கட்­டத் தேர்­த­லில் சுமார் 78.36% விழுக்­காடு வாக்­குப் பதி­வா­கி­யுள்­ளது.

294 தொகு­தி­களைக் கொண்ட மேற்கு வங்­காள சட்­ட­ச­பைக்கு எட்டு கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெ­று­கிறது.

ஏற்­கெ­னவே நான்கு கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெற்ற நிலை­யில் சனிக்­கி­ழமை அன்று 5ஆம் கட்­டத் தேர்­தல் நடை­பெற்­றது.

இதில் 45 சட்­ட­சபைத் தொகுதி­ க­ளுக்­கான தேர்­த­லில் 39 பெண்­கள் உள்­பட 319 வேட்­பா­ளர்­கள் போட்டியிட்­ட­னர்.