"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டும் நன்றாக இருக்கிறேன்"

"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டும் நன்றாக இருக்கிறேன்"

1 mins read
1deee13b-8c25-4741-b61a-8ea99bf61bac
ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால் கிருமியின் தாக்கம் குறைந்து விடும் என்று அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு கூறுகிறார். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

டெல்லி: இந்­திய அமைச்­சர்­கள் பலர் இரண்­டா­வது கிரு­மிப் பர­வ­லில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஆனால் அவர்­கள் தங்­க­ளு­டைய பணி­களைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

மத்­திய விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் கிரண் ரிஜ்ஜிஜு, கொரோனா கிருமி 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தான் நல­மாக இருப்­ப­தாக அவர் தெரி­வித்து உள்­ளார். தனது அன்­றாடப் பணி­களை எப்­போ­தும்­போல மேற்­கொண்டு வரு­ வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

2வது முறை­யாக இதுபோல கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் யாரும் அது பற்றி பயப்­ப­டா­மல் ஆரோக்­கி­ய­மான உணவை உண்டு ஓய்வு எடுத்­தாலே கிருமியின் தாக்­கம் நின்று­ வி­டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இரு முதல்வர்கள் உட்பட பல அமைச்சர்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாதிக்கப் பட்ட முதல்வர்கள் ஆவர்.