புதுடெல்லி: கிருமிப் பரவலைக் கருத்தில் கொண்டு இன்று முதல் மிகவும் அவசரமான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறி வித்துள்ளது.
இவ்வாண்டு தாக்கல் செய்யப் பட்ட மிக அவசர வழக்குகள் மட்டுமே திங்கள்கிழமை முதல் விசாரிக்கப்படும், வழக்கமான அல்லது அவசரமற்ற வழக்குகள் எதுவும் விசாரிக்கப்படாது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்றம் தெரிவித்தது.
டெல்லியில் கொரோனா கிருமியின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் 2021ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மிக அவசரமான விவகாரங்களை மட்டுமே விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
வழக்கமான அல்லது அவசரமற்ற வழக்குகள் மற்றும் மார்ச் 22, 2020 மற்றும் டிசம்பர் 31, 2020க்கு இடையில் தாக்கல் செய்யப்பட்ட / பட்டியலிடப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அந்த வழக்குகள் ஒத்திவைக்கப் படும். அவசரநிலையாக இருந்தால் கோரிக்கை வைக்கலாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

