'ரெம்டெசிவிர்' ரூ.35,000க்கு விற்பனை

'ரெம்டெசிவிர்' ரூ.35,000க்கு விற்பனை

1 mins read
100a4cc6-b57e-458e-9733-66bb416f6f7a
மகாராஷ்டிராவில் போலி 'ரெம்டெசிவிர்' மருந்தை கள்ளச் சந்தையில் ரூ. 35,000க்கு விற்றதாகக் கூறப்படும் கும்பலை போலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பல்­வேறு மாநி­லங்­களில் கொரோனா தடுப்­பூ­சிக்கு கடும் பற்­றாக்­குறை ஏற்­பட்டு உள்­ளது.

கொரோனா பாதிப்­புக்கு உள்­ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயா­ளி­கள் பயன்­பாட்­டிற்­கான உயிர்­காக்­கும் 'ரெம்­டெ­சி­விர்' மருந்­துக்­கும் பல்­வேறு மாநி­லங்­களில் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. சில இடங்­களில் 'ரெம்­டெ­சி­விர்' மருந்து சட்­ட­வி­ரோ­த­மாக அதிக விலைக்கு கள்­ளச்­சந்­தை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன.

இந்த நிலை­யில் மராட்­டிய மாநி­லத்­தில் உள்ள புனே நக­ரின் பார­மதி பகு­தி­யில் போலி 'ரெம்­டெ­சி­விர்' மருந்­தை விற்­பனை செய்த நால்­வரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து கொரோனா சிகிச்­சைக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் 'ரெம்­டெ­சி­விர்' என்று பெய­ரி­டப்­பட்ட மூன்று ஊசி குப்­பி­கள் கைப்­பற்­றப்பட்­ட­ன.

ஆனால் உண்­மை­யில் திரவ வடி­வத்­தில் பார­சிட்­ட­மால் தவிர வேறு எது­வும் அதில் நிரப்­பப்­ப­ட­வில்லை என்று மூத்த காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

சந்­தேக நபர்­கள் போலி மருந்தை ஒரு குப்­பிக்கு ரூ.35,000க்கு என விற்­பனை செய்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது. அதன் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சந்தை விலை ரூ. 1,100 ஆகும்.

"இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அத்­தி­யா­வ­சியப் பொருட்­கள் சட்­டம், மருந்து மற்­றும் அழகு சாத­னச் சட்­டம் மற்­றும் மருந்­து­கள் (விலைக் கட்­டுப்­பாடு) சட்­டம் ஆகி­ய­வற்­றின் கீழ் நான்கு பேரை நாங்­கள் கைது செய்­துள்­ளோம்," என்று பார­மதி பிரிவு துணை போலிஸ் சூப்­பி­ரிடென்­டெண்ட் நாரா­யண் ஷிர்­காவ்­கர் குறிப்­பிட்­டார்.