மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகள்

மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகள்

1 mins read
4c90fa58-3918-4b1d-9dd2-daba8768c117
-

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் டெல்லி முடக்கப் பட்டதால் நேற்று சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மக்கள் நடமாட்டம் அறவே இல்லை. பாலைவனம்போல காட்சியளித்தது. டெல்லியில் 24 மணி நேரத்தில் சுமார் 25,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவ மனைகளில் தடுப்பூசி, படுக்கைகள், ஆக்ஸிஜன் தோம்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் கவலை அடைந்துள்ளார். படம்: ஏஎஃப்பி