கோல்கத்தா தேர்தல் பிரசாரத்தைக் கைவிட்டார் முதல்வர் மம்தா

கோல்கத்தா: கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், கோல்­கத்­தா­வில் மேற்­கொள்ள இருந்த தேர்­தல் பிர­சா­ரத்­தைக் கைவி­டு­வ­தாக மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

ஏப்­ரல் 26ஆம் தேதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பிர­சா­ரக் கூட்­டத்­தில் மட்­டும் அவர் பங்­கேற்க உள்­ள­தாக 'இந்­துஸ்­தான் டைம்ஸ்' நாளேடு குறிப்­பிட்­டுள்­ளது.

முன்­ன­தாக ராகுல் காந்­தி­யும் தனது பிர­சா­ரத்தை ரத்து செய்­வ­தாக அறி­வித்­தி­ருந்­தார். மேற்கு வங்­கத்­தில் எட்டு கட்­டங்­க­ளாக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெறு­கிறது. இது­வரை ஐந்து கட்ட வாக்­குப்­ப­திவு முடிந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தொற்­றுப்­ ப­ர­வல் அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்­குப் பொறுப்­பேற்று பிர­த­மர் மோடி பதவி விலக வேண்­டும் என மம்தா வலி­யு­றுத்தி உள்­ளார்.

மேற்கு வங்­கத்­தில் அனை­வ­ருக்­கும் இல­வச­மாக போடு­வ­தற்கு 5.4 மில்­லி­யன் கோடி டோஸ் தடுப்­பூசி­களை அளிக்கு­மாறு பிர­த­ம­ரி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது என்­றும் இது தொடர்­­பாக தமக்கு இன்னும் பதில் ஏதும் வர­வில்லை என்­றும் முதல்­வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

"தற்­போ­தைய நிலை­மைக்கு பிர­த­மர்­தான் கார­ணம். 2021ஆம் ஆண்­டின் நிர்­வா­கத் திட்­ட­மி­ட­லுக்கு அவர் எதை­யும் செய்­ய­வில்லை.நாட்டை நெருக்­க­டி­யான நிலைக்கு அவர் கொண்டு சென்­றுள்­ளார்," என்று மம்தா கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி­யை­யும் தம்­மை­யும் வசை­பா­டு­வ­தற்கே முதல்­வர் மம்தா அதிக நேரம் செல­விடு­கி­றார் என தேர்­தல் பிர­சா­ரத்­தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்­றம்­சாட்டி உள்­ளார்.

மேற்கு வங்­கத்தை வளர்ச்­சிப் பாதைக்கு அழைத்­துச் செல்­வ­தற்­கான திட்­டம் முதல்­வர் மம்­தா­வி­டம் இல்லை என­ அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே பர்­கா­னாஸ் மாவட்­டத்­தில் உள்ள பாஜ­க­வின் பிரசார அலு­வ­ல­கம் மீது சிலர் குண்டு வீசி தாக்­கு­தல் நடத்­தி­ய­தால் அங்கு சில மணி நேரம் பதற்­றம் நிலவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!