உள்நாட்டு பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கவலைப்படவில்லை: எதிர்க்கட்சிகள் தாக்கு

உள்நாட்டு பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கவலைப்படவில்லை: எதிர்க்கட்சிகள் தாக்கு

2 mins read
ee9a6136-fe9d-41de-8ec6-72dd54e27457
-

புது­டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அபாய கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலை­யில், பிர­த­மர் மோடி தேர்­தல் பிர­சா­ரக் கூட்­டங்­களில் பங்­கேற்­பது விமர்­ச­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­தாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரி­வித்­துள்­ளது.

கடந்த 17ஆம் தேதி மேற்கு வங்­கத்­தில் நடை­பெற்ற தேர்­தல் பிர­சா­ரப் பேர­ணி­யில் பங்­கேற்­ற­போது பிர­த­மர் மோடி முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"இது­போன்ற பெரும் கூட்­டத்தை நான் இது­வரை கண்­ட­தில்லை. கொரோனா கிரு­மியை இந்­தியா கடந்த ஆண்டு வென்­றது. இந்­தியா மீண்­டும் வெற்றி பெற முடி­யும்," என்று பிர­சா­ரக் கூட்­டத்­தில் பேசி­ய­போது குறிப்­பிட்­டார் பிர­த­மர் மோடி.

இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டி­ரா­வில் போது­மான அளவு ஆக்­சி­ஜ­னும் ரெம்­டெ­சி­விர் மருந்­தும் இல்லை என்­றும் இது குறித்து பிர­த­ம­ரி­டம் விவ­ரம் தெரி­விக்க முடி­ய­வில்லை என்­றும் அம்­மா­நில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

பிர­த­மர் மோடி தேர்­தல் கூட்­டங்­களில் பங்­கேற்­ப­தால் தம்­மு­டன் பேச இய­ல­வில்லை என தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு பிற நாடு­க­ளுக்கு மில்­லி­யன் கணக்­கான தடுப்­பூசி­களை அனுப்பி வரும் நிலை­யில் உள்­நாட்­டில் 123 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் மட்­டுமே போடப்­பட்­டுள்­ள­தாக கூறி­யுள்­ளார் பஞ்­சாப் முதல்­வர் அம­ரிந்­தர் சிங்.

நாட்­டின் மொத்த மக்­கள் தொகை­யில் இது­வரை 1.2 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­க­வும் அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

பஞ்­சாப்­பில் நான்கு ஆக்­சி­ஜன் உற்­பத்தி நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான விண்­ணப்­பங்­களை தமது அரசு கடந்த ஆண்டே மத்­திய அரசி­டம் அளித்­த­தா­க­வும் இது­வரை அதற்கு அனு­மதி கிடைக்­க­வில்லை என்­றும் முதல்­வர் அம­ரிந்­தர் சிங் சாடி­யுள்­ளார்.

இதற்­கி­டையே கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்டுப்­படுத்­து­வது மாநில அரசு­க­ளின் பொறுப்பு என மத்­திய ரயில்வே அமைச்­சர் பியுஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார் என்று செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்­திய அர­சி­டம் ஆக்­சி­ஜன் வேண்­டும் என மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கோரிக்கை விடுத்­தி­ருப்­பது அவ­ரது வெட்­கக்­கே­டான அர­சி­யலை வெளிப்­படுத்தி இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் பியுஷ் கோயல் கூறி­யுள்­ளார்.

ஆக்­சி­ஜன் தேவையை ஈடு­கட்ட மாநில அர­சு­கள்­தான் உரிய நட­வடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.