மன்மோகன், ராகுலுக்கு 'கொவிட்-19' பாதிப்பு

மன்மோகன், ராகுலுக்கு 'கொவிட்-19' பாதிப்பு

2 mins read
01d4f403-62a2-48b2-9aa4-9c65f719a2b6
ஊரடங்கு அறிவிப்பை அடுத்து டெல்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கா னோர் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இதனால் வெளியூர், வெளி மாநிலம் செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன.படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: முன்­னாள் பிர­த­மர் மன்­மோ­கன் சிங், காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் உள்­ளிட்ட பல தலை­வர்­களும் முக்­கிய பிர­மு­கர்­களும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் மனை­விக்­கும் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது. இதை­ய­டுத்து முதல்­வர் கெஜ்­ரி­வால் தம்மை தனி­மைப்­படுத்­திக் கொண்­டுள்­ளார்.

முன்­னாள் பிர­த­மர் மன்­மோ­கன் சிங் சிகிச்­சைக்­காக டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவ­ருக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ் வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவுக்­கும் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

தமக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி இருப்­ப­தா­க­வும் தொற்­றுக்­கான சில லேசான அறி­கு­றி­கள் மட்­டுமே தமக்கு இருந்­த­தா­க­வும் ராகுல் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார். எனவே அனைவரும் பாது­காப்­பாக இருக்க வேண்­டும் என அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கொரோனா பர­வல் அதி­கரித்­ததை அடுத்து மேற்கு வங்க மாநிலத் தேர்­தல் பிர­சா­ரத்­தில் தாம் பங்­கேற்­கப் போவ­தில்லை என்று அண்­மை­யில் ராகுல் அறி­வித்­தி­ருந்­தார்.

இதற்­கி­டையே உத்­த­ரப் பிர­தே­சத்­தில் வார இறுதி நாள்­களில் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­படும் என மாநில அரசு அறி­வித்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை இரவு எட்டு மணி முதல் திங்­கள்­கி­ழமை காலை ஏழு மணி வரை இந்த ஊர­டங்கு அம­லில் இருக்­கும்.

முன்­ன­தாக அம்­மா­நி­லத்­தின் ஐந்து மாவட்­டங்­களில் ஊர­டங்கை அமல்­ப­டுத்த வேண்­டும் என அல­கா­பாத் உயர் நீதி­மன்­றம் பிறப்­பித்த உத்­த­ர­வுக்கு உச்ச நீதி­மன்­றம் நேற்று இடைக்­கா­லத் தடை விதித்­தது. அம்மாநில அமைச்சர் ஹனுமன் மிஷ்ரா கொவிட்-19 பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

ஒடி­சா­வில் தொற்­றுப்­ப­ர­வ­லைத் தடுக்க ஏது­வாக நகர்ப்­பு­றங்­களில் வார இறுதி நாள்­களில் ஊர­டங்கு அம­லுக்கு வரு­கிறது. இது­வரை இல்­லாத அள­வுக்கு தொற்­றுப்­பா­திப்பு உச்­சத்­தில் உள்­ளது.

மேகா­ல­யா­வில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கத்­தால் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை ஆறு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இதை­ய­டுத்து அங்கு கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இதற்­கி­டையே மத்­திய இணை அமைச்­சர் ஜிதேந்­திர சிங்­, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மத்­திய அமைச்­சர் கிரண் ரெஜ்ஜு, உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் ஆகி­யோ­ரும் ஏற்கெனவே பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.