ராகுல் சாடல்: திட்டமிடப்படாத தடுப்பூசித் திட்டம்

ராகுல் சாடல்: திட்டமிடப்படாத தடுப்பூசித் திட்டம்

1 mins read
1e8b445f-46f3-4853-8323-288f1c7dd2a7
-

புது­டெல்லி: இந்­திய அர­சின் தடுப்­பூ­சித் திட்­டம் பாகு­பாடு உடை­யது என காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

எந்­த­வி­த­மான பகிர்­மானக் கொள்கை இன்­றி­யும் திட்­ட­மிடா­ம­லும் தடுப்­பூ­சித் திட்­டம் செயல்­ப­டுத்­தப்படு­வ­தாக டுவிட்­டர் பதி­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ள­தாக இந்­துஸ்­தான் டைம்ஸ் நாளேடு தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா ஆக்­சி­ஜன் இல்­லா­மல் மூச்­சுத் திண­று­கிறது என்­றும் சுய மன­நி­றைவு கொள்­ளும் இந்­திய அர­சுக்­கும் அதன் திற­மை­யின்­மைக்­கும் நன்றி என்­றும் ராகுல் கூறி­யுள்­ளார்.

"மத்­திய அர­சின் புதிய தடுப்­பூ­சிக் கொள்­கை­யால் 18 வயது முதல் 45 வய­துள்­ள­வர்­க­ளுக்கு இல­வ­ச­மா­கத் தடுப்­பூசி கிடைக்­காது. இடைத்­த­ர­கர்­கள் தடுப்­பூ­சி­களை வாங்கி வைத்­துக்­கொண்டு விருப்­பம்­போல் விலை நிர்­ண­யிப்­பார்­கள்.

"விளிம்­பு­நிலை மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி கிடைக்க எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­த­மும் இல்லை," என்று ராகுல் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ராகுல் மீண்டு வர பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்­கி­டையே, 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி போடும் மத்­திய அர­சின் திட்­ட­மா­னது பொறுப்­பைத் தட்­டிக்­க­ழிக்­கும் செயல் என்று மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி விமர்­சித்­துள்­ளார்.