காங்கிரஸ்: மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது

புது­டெல்லி: உலக அள­வில் ஆக்­சி­ஜன் உற்­பத்தி செய்­யும் திறன் கொண்ட நாடு­களில் முதன்­மை­யான இடத்­தில் உள்ள இந்­தி­யா­வில் ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாடு ஏற்­பட என்ன கார­ணம் என காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

மத்­திய அர­சின் மோச­மான திட்­ட­மிடலே நாட்­டில் கொரோனா தடுப்­பூசி தட்­டுப்­பாடு ஏற்­ப­டக் கார­ணம் என்­றும் அவர் குறிப்­பிட்­ட­தாக தினத்­தந்தி நாளேடு தெரி­வித்­துள்­ளது.

"எந்­த­வி­தத் திட்­ட­மும் இல்­லா­தது தான் ரெம்­டெ­சி­விர் தடுப்­பூசி மருந்து பற்­றாக்­குறை ஏற்­பட கார­ணம். சரி­யான திட்­ட­மி­டல் இல்­லா­ததே ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாடு ஏற்­பட கார­ணம். இது மத்­திய அர­சின் தோல்­வி­யா­கும்," என்று பிரி­யங்கா காந்தி கூறி­யுள்­ளார்.

கொரோனா முதல் அலைக்­கும் இரண்­டா­வ­துக்­கும் இடையே 9 மாத காலம் இடை­வெளி இருந்தபோதும் மத்­திய அரசு அதைப் பயன்­ப­டுத்தத் தவறிவிட்டது என அவர் மேலும் சாடி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் விஷ­யத்­தில் மத்­திய அரசு 'ஒரே தேசம் ஒரே விலை' என்­பதை அமல்­ப­டுத்த வேண்­டும் என காங்­கி­ரஸ் வலி­யு­றுத்தி உள்­ளது. மத்­திய அர­சின் தடுப்­பூ­சிக் கொள்கை பிற்­போக்­குத்­த­ன­மா­க­வும் சமத்­து­வ­மற்­ற­தா­க­வும் உள்­ள­தாக காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ப.சிதம்­ப­ரம் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!