கேரளச் சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

கேரளச் சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

1 mins read
70c806c5-a18f-4b39-996b-20a9b2f4b13f
நடிகர் ரஜினிகாந்தின் முகத்தை 300 'க்யூப்ஸ்'களைக் கொண்டு வரைந்துள்ள கேரளாவைச் சேர்ந்த சிறுவன் அத்வைத்துக்கு 'சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க்' என குரல் பதிவு மூலம் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். படம்: தமிழக ஊடகம் -

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 வண்ண மயமான 'க்யூப்ஸ்'களைப் பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தினை ஓவியமாக வடித்துள்ளார்.

இதை இணையத்தில் பதிவிட்ட சிறுவன், "ரஜினிகாந்த் சார், 'ரூபிக் க்யூப்ஸ்' எனக்கு மிகவும் பிடிக்கும். 300 'க்யூப்ஸ்'களைக் கொண்டு உங்கள் உருவப்படத்தை வடித்துள்ளேன். நீங்கள் இதை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்!'' என்று கூறியிருந்தார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் பரவியது. இந்நிலையில் தனது முகத்தை 300 'க்யூப்ஸ்'களைக் கொண்டு வரைந்த கேரளச் சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறுவன் அத்வைத், பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, சுரேஷ்கோபி, சல்மான்கான், பாடகி சித்ரா உள்ளிட்ட பலரின் உருவப்படங்களையும் 'க்யூப்ஸ்'களைப் பயன்படுத்தி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்