ராகுல் காந்தி: நண்பர்களின் ஆதாயத்திற்காக தடுப்பூசிக்கு விலை நிர்ணயம்

ராகுல் காந்தி: நண்பர்களின் ஆதாயத்திற்காக தடுப்பூசிக்கு விலை நிர்ணயம்

1 mins read
2398d66a-094d-4e6b-9871-d7649f83c97e
-

புது­டெல்லி: கொவிட்-19 தடுப்­பூசிக்கு விலை நிர்­ண­யம் செய்து மத்­திய அரசு அறி­வித்­தி­ருப்­பது நாட்­டுக்கே பேர­ழிவு என்று காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் ராகுல் காந்தி விமர்­சித்­துள்­ளார். தடுப்­பூ­சியை அரசு மருத்­துவம­னை­கள் ரூ.400க்கும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் ரூ. 600க்கும் கொள்­மு­தல் செய்­து­கொள்­ள­லாம் என்று மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. இதற்கு ராகுல் காந்தி கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து டுவிட்­ட­ரில் கருத்து தெரி­வித்­துள்ள ராகுல் காந்தி, இது நாட்­டிற்கே பேர­ழிவு என்று குறிப்­பிட்­டுள்­ளார். மோடி­யின் நண்­பர்­க­ளுக்­கான வாய்ப்பு இது என்­றும் மத்­திய அரசு மக்களுக்கு செய்துள்ள அநீதி என்­றும் அவர் விமர்­சித்­துள்­ளார்.

இதே போல் கொரோனா தடுப்­பூ­சிக்கு விலை நிர்­ண­யம் செய்து இருப்­ப­தன் மூலம் மாநில அர­சு­களை மத்­திய அரசு சிக்­க­லில் மாட்­டி­விட்டு தப்­பித்துக் கொண்­டாக முன்­னாள் மத்­திய அமைச்­சர் ப. சிதம்­ப­ரம் கருத்து தெரி­வித்­துள்­ளார். ஐந்து பேர்களைக் கொண்ட நடுத்தரக் குடும்­பத்­தில் 2 தவணை தடுப்­பூசியை வாங்கிப் போட்­டுக்­கொள்ள முடி­யுமா என்று அவர் கேள்வி எழுப்­பி­னார். இதுதான் மலிவு விலை தடுப்­பூ­சியா என்­றும் அவர் கேள்வி எழுப்பி இருக்­கி­றார்.