மும்பை: மருத்துவனையில் தீ; 13 நோயாளிகள் பலி

மும்பை: மும்­பை­யில் உள்ள விரார் மேற்­குப் பகு­தி­யி்ல் உள்ள விஜய் வல்­லபா அரசு மருத்­து­வ­ம­னை­யில் நேற்று அதி­காலை ஏற்­பட்ட தீவி­பத்­தில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த கொரோனா நோயா­ளி­கள் 13 பேர் உடல்­க­ருகி உயி­ரி­ழந்­த­னர் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நாசிக் நக­ரில் உள்ள இந்த மருத்­து­வ­ம­னை­யில் ஆக்ஸிஜன் டேங்கில் கசிவு ஏற்­பட்டு விநி­யோ­கம் நின்­று­போ­ன­தால் இரண்டு நாட்­க­ளுக்­கு­ முன் 24 கொரோனா நோயா­ளி­கள் உயி­ரி­ழந்­த­னர். இப்­போது அடுத்த சோகம் நிகழ்ந்­துள்­ளது.

பால்­கர் மாவட்­டம், வாசி விரார் நக­ராட்­சிக்கு உள்­பட்ட பகு­தி­யில் உள்ள விஜய் வல்­லபா கொரோனா சிகிச்சை நிலை­யம் செயல்­பட்டு வரு­கிறது. இந்த அரசு மருத்­து­வ­ம­னை­யில் உள்ள தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கொரோனா நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வந்­த­னர்.

இந்­நி­லை­யில் நேற்று அதி­காலை 3.15 மணி அள­வில் அம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஏற்­பட்ட மின்­க­சிவு கார­ண­மாக தீவி­பத்து ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தீய­ணைப்­புத் துறை­யி­னர் சம்­பவ இடத்­திற்கு வரு­வ­தற்­குள் தீ, தீவி­ரச் சிகிச்­சைப் பிரிவு முழு­வ­தும் பர­வி­யது. அப்­போது நல்ல உறக்­கத்­தில் இருந்த நோயா­ளி­கள், அந்த இடத்­தில் இருந்து தப்­பிக்க முடி­யா­மல் தீயில் சிக்­கிக் கொண்­ட­னர்.

தீ விபத்து குறித்து உட­ன­டி­யாக தீய­ணைப்­புப் படை­யின­ருக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்டு அவர்­கள் விரைந்து வந்து தீயை அணைக்­கும் முயற்­சி­யி­லும், மீட்பு நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­பட்­ட­னர்.

இந்த தீ விபத்­தில் கொரோனா நோயா­ளி­களில் 13 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­னர். தீக்­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்ட 5 நோயா­ளி­களும் மற்ற 21 நோயா­ளி­களும் மீட்­கப்­பட்டு வேறொரு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நான்கு மாடிகளைக் கொண்ட அந்த மருத்துவமனையின் மற்ற தளங்களில் மொத்தம் 90 நோயாளிகள் மற்ற நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, டுவிட்டரில் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!