24 மணி நேரத்தில் 332,730 பேருக்கு கொரோனா தொற்று

24 மணி நேரத்தில் 332,730 பேருக்கு கொரோனா தொற்று

1 mins read
184b12e2-b435-455e-9473-a85aa44a9d80
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இது­வ­ரை­ இல்­லாத அள­வுக்­குக் கடந்த 24 மணி நேரத்­தில் 332,730 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ளனர். அத்­து­டன் 2,263 பேர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­னர் என்று இந்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று 568 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். டெல்­லி­யில் 306 பேரும், சத்­தீஸ்­க­ரில் 207 பேரும், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 195 பேரும், குஜ­ராத்­தில் 135 பேரும், கர்­நா­ட­கா­வில் 123 பேரும், ஜார்க்­கண்­டில் 106 பேரும், தமிழகத்தில் 59 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர்,

இது­வரை 27 கோடியே 44 லட்­சத்து 45 ஆயி­ரத்து 653 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும், 17 லட்­சத்து 40 ஆயி­ரத்து 550 மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.