ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொவிட்-19 மரணங்கள் அதிகரிப்பு

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொவிட்-19 மரணங்கள் அதிகரிப்பு

2 mins read
b3e73dd9-9286-4fbe-998e-14a67d9c2135
ஹைதராத்தில் தோம்புகளில் சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை நிரப்புகிறார் ஆடவர் ஒருவர். படம்: இபிஏ -

புது­டெல்லி: புது­டெல்­லி­யில் மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. டெல்­லி­யில் மட்­டும் கடந்த 24 மணி நேரத்­தில் 306 பேர் கொரோனா தொற்­றுக்­குப் பலி­யா­கி­யுள்­ள­னர்.

கடந்த ஆண்டு கொவிட்-19 தொற்று நெருக்­கடி தொடங்­கி­ய­தற்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான கொவிட்-19 மர­ணப் பதிவு என்று கூறப்­ப­டு­கிறது.

ஏனெ­னில் இப்­போது கொவிட்-19 சிகிச்­சைக்­குத் தேவைப்­படும் ஆக்­சி­ஜன் கிடைக்­கா­மல் டெல்லி மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­கள் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் ஆக்சிஜன் தோம்­புக்­கான தட்­டுப்­பாடு நீடித்­தால் கொவிட்-19 மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

மகா­ராஷ்­டிரா, குஜ­ராத், ஹரி­யானா, மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை நில­வு­கிறது.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தின் பல பகு­தி­களில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் 'ஆக்­சி­ஜன் முடிந்­து­விட்­டது' என்ற அறி­விப்­புப் பலகை வைக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மா­நி­லத்­தின் தலை­ந­க­ரான லக்­னோ­வில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாட்­டால் அங்­குள்ள நோயா­ளி­கள் வேறு மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் செல்­லு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. டெல்­லி­யில் உள்ள சிறிய மருத்­து­வ­ம­னை­களும் இந்த ஆக்­சி­ஜன் பற்­றாக்­கு­றை­யால் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நோயா­ளிக்­குத் தேவைப்­படும் ஆக்­சி­ஜ­னைப் பெற்று வரு­வ­தற்கு நோயா­ளி­யின் உற­வி­னர்­கள் ஆக்­சி­ஜன் நிரப்­பும் நிலை­யங்­க­ளுக்­குப் படை­யெ­டுக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. நாடு முழு­வ­தும் தொற்று அதி­க­ரித்து வரு­வதை அடுத்து பல மாநி­லங்­களில் ஆக்­சி­ஜன் தோம்­பு­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் அந்­நி­லை­யங்­கள் அங்கு வரும் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் தடு­மாறி வரு­கின்­றன. நோயா­ளி­கள் பலர், ஆக்­சி­ஜ­னுக்­கா­கக் காத்­தி­ருந்து உயிர்­வி­டும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சாதா­ர­ண­மாக நாட்­டின் மொத்த ஆக்­சி­ஜன் விநி­யோ­கத்­தில் 15% சுகா­தா­ரத்­துறை பயன்­பாட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. ஆனால், இந்த நெருக்­கடி காலத்­தில் 90 விழுக்­காடு அதா­வது 7,500 மெட்­ரிக் டன் ஆக்­ஸி­ஜன் மருத்­து­வப் பயன்­பாட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தாக மூத்த சுகா­தா­ரத்­துறை அதி­காரி ராஜேஷ் புஷான் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தொற்­றால் பாதிப்பு அடைந்­த­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க முடி­யா­மல் மருத்­து­வ­ம­னை­கள் திண்­டாடி வரு­கின்­றன. பல்­வேறு மாநி­லங்­களில் சிகிச்­சைக்­குத் தேவை­யான ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

"தொற்று தாக்­கி­னால் உட­லில் ஆக்­சி­ஜன் அளவு குறைந்­து­வி­டும். ஆனால், மருத்­து­வ­ம­னை­களில் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை மற்­றும் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் போதிய படுக்­கை­யின்மை ஆகிய கார­ணங்­க­ளால் அதி­க­மான நோயா­ளி­கள் உயி­ரி­ழக்க நேரி­டு­கிறது. இதற்கு மத்­திய அரசே பொறுப்பு," என்று காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்தி கூறி­யுள்­ளார்.