மரண பூமியாக மாறிய டெல்லி

மரண பூமியாக மாறிய டெல்லி

2 mins read
3b58adbd-d862-477a-829b-c0bf9976d5d0
டெல்லியில் நேற்று முன்தினம் குவிந்த கொவிட்-19 மரண சடலங்களால் அங்கிருக்கும் மயானங்களில் போதுமான இடமில்லை. ஒரு சடலம் எரியூட்டி முடிக்கப்படும் வரை மற்றொன்று காத்திருக்க வேண்டிய நிலை அங்கு இருந்தது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இரண்­டாம் கட்ட கிரு­மித்­தொற்று அபாய உரு­வெ­டுத்து இந்­தியா முழு­வ­தும் வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில் தொற்­றுக்கு பலி­யா­வோரின் எண்­ணிக்கை ஒவ்­வொரு நாளும் அதி­க­ரித்து வரு­கிறது.

தலை­ந­கர் டெல்­லி­யி­லும் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தி­லும் அதிர்ச்சி அளிக்­கும் விதத்­தில் மரண எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

அத­னால், மாண்­டோ­ரின் சட­லங்­கள் எரி­யூட்டு நிலை­யங்­கள் முன்­பும் நல்­ல­டக்க மயா­னங்­கள் முன்­பும் ஏரா­ள­மா­கக் குவிந்து வரும் அதிர்ச்சித் தக­வலை ஊட­கங்­கள் வெளி­யிட்டு வரு­கின்­றன.

அவ்­வாறு ஏரா­ள­மான சட­லங்­கள் டெல்­லி­யின் புற­ந­கர்ப் பகு­தி­யான காஸி­யாபாத்­திலுள்ள ஹிண் ­டன் தக­னச் சாலை முன்பு காணப்­பட்­ட­தாக இந்­தி­யா­வில் உள்ள ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தக­னம் செய்­வ­தற்­கா­கப் பல மணி நேரம் காத்­தி­ருந்த தமது தந்­தை­யின் சட­லத்தை கொவிட்-19 மறைப்பு உடை­ய­ணிந்த இளம்­பெண் ஒரு­வர் கட்­டிப் பிடித்து கதறி அழுத காட்­சி­யை­யும் அவர் கண்­டி­ருக்­கி­றார். அந்த இடத்­தின் அரு­கில் ஆம்­பு­லன்ஸ் ஒன்­றில் வந்­தி­றங்­கிய மற்­றொரு சட­லத்­தைக் கண்டு அதன் உற­வுப் பெண்­கள் இரு­வர் கட்­டிப் பிடித்து அழுது தங்­க­ளது தாங்க இய­லாத சோகத்தை வெளிப்­ ப­டுத்­தி­னர். வர­லாறு காணாத அள­வில் மரண எண்­ணிக்கை உயர்ந்து வரு­வ­தால் நாடு முழு­வ­துமே இது­போன்ற ஒரு துயர நிலை நில­வு­வ­தாக செய்­தி­யா­ளர் தெரி­வித்துள்­ளார்.

டெல்­லி­யில் வெள்­ளிக்­கி­ழமை பதி­வான மரண எண்­ணிக்கை 348. ஒரே நாளில் இந்த அள­வுக்கு அதி­க­மா­னோர் தொற்­றால் மாண்­டது அன்­றை­ய­ தி­னம்­தான். நான்கு நிமி­டங்­க­ளுக்கு ஒரு மர­ணம் என்று இது கணக்­கி­டப்­பட்டுள்­ளது. அதே நாளில் நாடு முழு­வ­தும் மாண்­டோர் எண்­ணிக்கை 2,200.

கிருமிப் பரவல் உச்சமடைந்ததால் நான்கு நிமிடத்திற்கு ஒருவர் மரணம்