35 ஆண்டுக்குப் பிறகு பிறந்த மகளை வரவேற்க ஹெலிகாப்டர்

35 ஆண்டுக்குப் பிறகு பிறந்த மகளை வரவேற்க ஹெலிகாப்டர்

1 mins read
7b41a7c4-98d0-470b-9dec-25309e6d430f
ரூ.5 லட்சம் செலவில் வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து மனைவி, குழந்தையை அழைந்து வந்த ஹனுமன் பிரஜாபத். படம்: ஊடகம் -

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தான் மாநி­லம் நாக­வுர் மாவட்­டத்­தில் நிம்தி சந்­த­வாதா எனும் கிரா­மத்­தைச் சேர்ந்த ஹனு­மன் பிர­ஜா­பத் - சுக்கி தேவி தம்­ப­தி­ய­ருக்கு மண­மாகி 35 ஆண்­டு­கள் கழித்து கடந்த மார்ச் 3ஆம் தேதி குழந்தை பிறந்­தது. நீண்ட காலம் கழித்து குழந்தை பிறந்­த­தால் ஹனு­மன் பிர­ஜா­பத் மிகுந்த மகிழ்ச்­சி­யில் இருந்­துள்­ளார். அந்­தப் பெண் குழந்­தைக்கு ரியா என பெயர் சூட்­டி­னார்.

பொது­வாக குழந்தை பிறந்­தால் சில­கா­லம் தாய் வீட்­டில் வைத்து பரா­ம­ரிப்­பார்­கள். அதன்­படி ஹர்­சோலா என்­னும் கிரா­மத்­தில் உள்ள தாய் வீட்­டிற்கு சுக்கி தேவி சென்றார். பின்­னர் மனை­வி­யை­யும் குழந்­தை­யை­யும் தமது வீட்­டுக்கு அழைத்து வர நாள் குறித்த ஹனு­மன் பிர­ஜா­பத், அதற்­காக ஹெலி­காப்­டர் ஒன்றை ஏற்­பாடு செய்­தார்.

அவ­ரது ஊருக்­கும் அவ­ரின் மனைவி இருந்த ஊருக்­கும் இடை­யில் 40 கிலோ­மீட்­டர் தூரம். இதனை பத்து நிமி­டத்­தில் ஹெலி­காப்­டர் கடந்­தது. இதற்­கான கட்­ட­ணம் சுமார் ரூ.5 லட்­சம். கடந்த புதன் கிழமை மனைவி, குழந்­தை­யு­டன் ஹெலி­காப்­ட­ரில் வந்­தி­றங்­கிய பிர­ஜா­பத்தை அவரது கிராம மக்கள் வியப்­பு­டன் கண்டு பாராட்­டி­னர்.