தடைக்கு முந்திய பயணம்: துபாய் விமானப் பயணக் கட்டணம் 10 மடங்கு அதிகம்

தடைக்கு முந்திய பயணம்: துபாய் விமானப் பயணக் கட்டணம் 10 மடங்கு அதிகம்

1 mins read
1701125c-4612-4f27-97b3-14a5ed55146a
-

மும்பை: இந்­தி­யா­வில் கொவிட்-19 நில­வ­ரம் மோச­ம­டைந்து வரு­வ­தால் அங்­கி­ருந்து வரு­வோ­ருக்கு சில நாடு­கள் தடை விதித்து வரு­கின்­றன. ஏற்­கெ­னவே இங்­கி­லாந்து, சிங்­கப்­பூர், கனடா போன்­றவை தடை விதித்­துள்ள நிலை­யில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் அறி­வித்த தடை இன்று முதல் நடப்­புக்கு வரு­கிறது.

அத­னால் துபாய்க்­குச் செல்­ப­வர்­கள் வெள்­ளிக்­கி­ழ­மை­யும் சனிக்­ கி­ழ­மை­யும் அவ­ச­ர­மா­கக் கிளம்­பிச் சென்­ற­னர். அதன் கார­ண­மாக விமா­னப் பய­ணக் கட்­ட­ணங்­கள் பத்து மடங்­குக்கு மேல் அதி­க­ரித்­து­விட்­டன. மும்­பை­யி­லி­ருந்து துபாய் செல்­வ­தற்­கான ஒரு­வழி பய­ணக் கட்­ட­ணம் 80,000 ரூபாய்க்கு (S$1,400) உயர்ந்­தது. வழக்­க­மான கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும் இது கிட்­டத்­தட்ட பத்து மடங்கு அதி­கம்.

அதே­போல புது­டெல்­லி­யில் இருந்து துபாய் செல்­வ­தற்­கான கட்­ட­ணம் கடந்த இரு நாட்­க­ளாக 50,000 ரூபாய்க்கு அதி­க­ரித்­தது. இது வழக்­க­மான கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும் சுமார் ஐந்து மடங்கு அதி­கம். இன்று தடை நடப்­புக்கு வரு­வ­தால் எந்த ஒரு விமா­ன­மும் இன்­றைய பய­ணத்­திற்­கான முன்

­ப­திவை ஏற்­க­வில்லை. ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் விதித்துள்ள தடை அடுத்த பத்து நாட்­க­ளுக்கு நடப்­பில் இருக்­கும்.

"சனிக்­கி­ழமை துபாய்க்கு 12 விமா­னங்­களை இயக்க ஏற்­பாடு செய்­தோம். அத்­த­னை­யி­லும் இருக்­கை­கள் நிரம்­பி­விட்­டன," என்று வாடகை விமான நிறு­வ­னம் ஒன்­றின் பேச்­சா­ளர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.