செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9e39d7b9-36b0-4d52-859c-7abb9532c192
-

கும்பமேளா சுகாதார ஊழியர்கள் 65 பேருக்கு கொவிட்-19 தொற்று

ரிஷிகேஷ்: அண்மையில் நடைபெற்று முடிந்த கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில்

65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் மருத்துவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, அந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்கள். லட்சக்கணக்கான பேர் கலந்துகொண்ட கும்பமேளா நிகழ்வு சுமார் 641 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கும் அதிகமான இடத்தில் நடைபெற்றது.

டெல்லியில் ஆக்சிஜன் உருளையை பதுக்கி வைத்து விற்றவர் கைது

புது­டெல்லி: டெல்­லி­யின் தாஷ்­ராத்­புரி பகு­தி­யில் ஒரு வீட்­டில் ஆக்­ஸி­ஜன் (உருளை) சிலிண்­டர்­களை பதுக்கிவைத்து சட்­ட­வி­ரோத வியா­பா­ரம் நடப்­ப­தா­கக் கிடைத்த ரக­சிய தக­வ­லின் அடிப்­ப­டை­யில் போலி­சார் அங்கு சென்று சோத­னை­யிட்­ட­னர். அப்­போது அனில் குமார் என்­ப­வ­ரின் வீட்­டின் கீழ்த்­த­ளத்­தில் 67 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட 32 பெரிய ஆக்­ஸி­ஜன் சிலிண்­டர்­களும் 10 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட சிறிய ஆக்­ஸி­ஜன் சிலிண்­டர்­களும் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. பெரிய சிலிண்­ட­ரி­லி­ருந்து சிறிய சிலிண்­ட­ருக்கு ஆக்­ஸி­ஜனை மாற்றி அதனை 12,500 ரூபாய்க்கு அவர் விற்­பனை செய்து வந்­தார். ஆக்­ஸி­ஜன் சிலிண்­டர்­கள் அனைத்­தும் பறி­மு­தல் செய்­யப்­பட்டு அனில்குமார் கைது செய்­யப்­பட்­டார்.

ஆக்சிஜனுக்கு கலால் வரி ரத்து

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றின் இரண்­டாம் அலை வேக­மாகப் பரவி வரும் நிலை­யில் பலர் ஆக்­சி­ஜன் கிடைக்­கா­மல் உயி­ரி­ழந்து வரு­கின்­ற­னர். ஆக்­சி­ஜன் தட்­டுப்­பாடு குறித்து பிர­த­மர் மோடி தலை­மை­யில் இன்று உயர்­மட்­டக் குழு ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டது. ஆலோ­சனை முடி­வில் ஆக்­சி­ஜன் தயா­ரிப்பு, சேமிப்பு தொடர்­பான உப­க­ர­ணங்­கள் இறக்­கு­மதி செய்ய விதிக்­கப்­படும் கலால் வரி, சுகா­தார செஸ் வரி உள்­ளிட்­டவை மூன்று மாதங்­க­ளுக்கு ரத்து செய்ய முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கூட்­டத்­தில்

மத்­திய அமைச்­சர்­கள் நிர்­மலா சீத்­தா­ரா­மன், ஹர்ஷ் வர்­தன், பியூஸ் கோயல் மற்­றும் மூத்த அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

எம்எல்ஏ உயிரைப் பறித்த தொற்று

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி புரியா, 49. இவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 11ஆம் தேதி அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் கலாவதி புரியா நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பால் மாண்டார்.