டெல்லியின் பிரபல மருத்துவமனை யான ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மேலும் நோயாளிகளைச் சேர்க்கமாட்டோம் என்று கூறியுள்ளது.
வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
"எதிர்நோக்கியிருக்கும் இந்த சூழ்நிலையை நாங்கள் அனைத்து அதிகாரிகளிடமும் சரியான நேரத்தில் தெரிவித்தோம். எங்களிடம் கூறப்பட்டது போல் பொருட்களுக்காக நேற்று முன்தினம் முதல் காத்துக் கொண்டிருக்கிறோம். வேறு வழியில்லாமல் புதிதாக நோயாளிகளைச் சேர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளோம்.
"ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறோம்," என்று மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது.
மருத்துவமனையில் சுமார் 100 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி
யோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொன்ன மருத்துவ
மனையைச் சேர்ந்த ஒருவர் தங் களுக்குத் தற்போது கிடைத்துள்ள ஆக்சிஜன் மறுநாள் மதியம் 1 மணி வரைதான் இருக்கும் என்றும் சொன்னார்.
ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவ
மனையில் 25 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்து
விட்டதாக அம்மருத்துவமனை கூறி
உள்ளது.
இந்நிலையில், தேவைக்குப் போக மீதமிருந்தால், ஆக்சிஜன் கொடுத்து உதவுமாறு மற்ற மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

