பஞ்சாப்பில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்குத் திருப்பும் வகையில் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டுப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அங்கு ஆறு பேர் உயிரிழந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரும்பு உலைகள், இரும்பு மற்றும் எஃகு பொருட்களை வெட்டி வடிவமைக்க தொழிற்சாலைகளில் எரிவாயுவுடன் பிராணவாயுவும் பயன்படுத்தப்படுகின்றது.
எனவே அவற்றை மருத்துவ தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பஞ்சாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பிராணவாயு தற்போதைய சூழலில் போதாது என்றும் இதுகுறித்து மத்திய அரசுடன் பேசியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அண்டை மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளின் வருகையால் பிராணவாயு தேவை பஞ்சாப்பிற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
அமிர்தசரஸ் நகரில் உள்ள நீலகண்ட் மருத்துவமனையில் பிராணவாயு பற்றாக்குறையால் 2 பெண்கள் உள்பட 6 பேர் மாண்டனர். இவர்களில் ஐவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

